Friday, October 28, 2011

விடியலை நோக்கியே பயணம் - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி



பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளுமே தனித்தனியே போட்டியிட்டு அவரவர் பங்கிற்கு மக்களிடத்திலிருந்து முடிவுகளையும் பெற்றிருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் சட்டமன்றத் தேர்தல் முடிவுற்று ஆளுங்கட்சிக்கு அபரிமிதமான இடங்கள் கிடைத்து, மக்களின் மனநிலையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படாத நிலையில் தமிழகம் இன்னொரு தேர்தலைச் சந்தித்திருப்பதால் உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்திற்குரியவை அல்ல என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

ஆனால், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய உண்மை வெளிச்சம் ஒன்று நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த வெளிச்சம் வெளிப்படும் தருணம் விரைவில் தேர்தல் முடிவுகளாகத் தென்படும் என்று �பிறைமேடை� இதழின் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். அது என்ன?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அதிகமாக, இன்னும் சொல்லப் போனால் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாழக்கூடியவை. அவை இஸ்லாமிய மார்க்கக் கலாச்சாரப் பெருமை கொண்ட பகுதிகள். காலம், காலமாக முஸ்லிம் சமுதாயப் பிரமுகர்களில் யாரேனும் ஒருவர்தான் அந்த நகராட்சியின், அல்லது பேரூராட்சியின் அல்லது ஊராட்சியின் தலைவராக இருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டவசமாக இதுபோன்ற பல பகுதிகளில் நம்முடைய மார்க்க ஒழுக்க நிலைகளைக் காப்பாற்றி, பேண முடியுமா? என்கிற கேள்விகள் எழக்கூடிய அளவுக்கு இந்த தேர்தலில் முஸ்லிம் அல்லாதவர்கள், சில இடங்களில் முஸ்லிம் விரோத அரசியல் நடத்துவோர்கூட பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஜனநாயக ரீதியில் நம்முடைய வாழ்த்துக்களைச் சொன்னாலும், சட்டரீதியாக எந்தக் குறையும் சொல்ல முடியாது என்றாலும், இத்தகைய விபத்துகளுக்கு என்ன காரணம் என்பதை மட்டும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. அது என்ன? நம்மவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நம்மை தலைமையேற்று வழிநடத்தி அப்பகுதி மக்களுக்கு அதிக சேவைகள் புரியும் நல்ல குணநலன் உள்ள ஒருவரை ஜமாஅத் ஒன்றுகூடி தேர்ந்தெடுத்து, ஒருவேளை போட்டி இல்லாமல் ஆகிவிட்டால் சிறந்தது; இல்லையானால் போட்டியிலும் களம் இறக்கச் செய்து நிச்சயமாக வெற்றியைப் பெற்றாக வேண்டும். இதுதான் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான செயல்முறையாக இருக்க முடியும். இந்த மையக் கருத்தை முன்வைத்துதான் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தலைமை ஒரு தெளிவான முடிவை அறிவித்தது.

��உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்யும் வேட்பாளர்களை ஜமாஅத்துடன் கலந்து பேசி, முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட்டு ஜமாஅத் அமைப்புகளின் ஆதரவோடு இணங்கி செயலாற்றி நம் சமுதாயத்தவர்களின் வெற்றி வாய்ப்பினை நழுவவிடாமல் நல்ல முடிவுகளைப் பெற வேண்டும்�� என்பதுதான். அதன்படி ஒத்துவந்த பகுதிகளிளெல்லாம் நம்முடைய சமுதாயப் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற நல்ல செய்திகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதே நேரத்தில் ஒத்துப் போகாத பல இடங்களில் நாம் எண்ணியபடியே உள்ளாட்சித் தலைமைப் பொறுப்புகளை மற்றவர்களுக்குத் தாரை வார்த்திருக்கிறோம். இதுதான் வேதனையின் உச்ச நிலையாக இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கும் படிப்பினை.

நம் சமுதாயத்தின் கட்டமைப்பு என்பது ஜமாஅத் ஒன்றுதான். அந்த ஜமாஅத் ஐக்கியத்தில் உள்ளவர்கள் எந்த அமைப்பு, எந்த கட்சி, எந்த இயக்கம் என்று பாராமல் சமுதாயம் என்கிற சமுத்திரத்தில் சங்கமம் ஆகவேண்டும் என்பதே முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம். இஸ்லாமும் அதைத் தானே சொல்கிறது. நம்மில் அந்த மனநிலை உருவாகாத காரணத்தால் நம்மை மற்றவர்கள் ஆளுகிற மற்றும் ஆட்டிப் படைக்கிற காட்சிகள் ஆங்காங்கே அரங்கேறுகிற நிலையினைப் பார்க்கிறோம்.

ஒரே ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிதான் எனது சொந்த ஊர். சென்ற ரமளான் மாதத்தில் ஊருக்குச் சென்றபோது அனைத்து ஜமாஅத்துகளும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் பேசுகிறபோது ��நமக்குள் போட்டியில்லாமல் ஒருமித்த கருத்தொன்றை உருவாக்கி ஒருவரை மட்டும் களத்தில் போட்டியாளராக ஆக்குங்கள்; அத்தகைய ஒருமித்த கருத்து உருவாகவில்லையெனில் களம் காணவிரும்புவோரின் பெயர்களை எழுதிப் போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து, நமக்குள் ஒத்துப்போய் தேர்தல் களத்தைச் சந்தித்தால் நமக்குத் தலைமையேற்று நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவராகப் பணிசெய்யும் ஒருவரை மிக எளிதாகத் தேர்ந்தெடுத்துவிடலாம். தேர்தல் நாள் வரையிலும், தேர்தல் முடிவு வரும் வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இத்தகைய அறிவுப்பூர்வமான, தார்மீக அடிப்படையிலான, பெருந்தன்மைமிக்க செயல்முறையைத் தட்டிக் கழித்தால் நம்மில் ஆளுக்கொரு முடிவெடுத்து பல எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களம் கண்டு, நமது வாக்குகளெல்லாம் பலருக்கும் சிதறிப்போய் நம்மில் யாருக்கும் பலன் இல்லாமல் மற்ற ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று இதயப்பூர்வமாக எச்சரித்தும் குறிப்பிட்டேன்.

அதற்கு ஒரு உதாரணமாக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதியில் 65 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருந்தும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்தவர்; காரணம் நம்மில் போட்டியாளர்களாக 15 பேர் களம் கண்டார்கள்; மற்றவர்களில் பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்த ஒருவர் மட்டும்தான் போட்டியில். அதனால் நம்மவர்களின் வாக்குகள் சிதறிப் போய் ��யார் வரக்கூடாது�� என்று சொல்லி நாம் எல்லோரும் பிரச்சாரம் செய்தோமோ அவரையே மறைமுகமாக வெற்றிபெறச் செய்துவிட்டோம்�� என்கிற நிகழ்வினை நினைவூட்டி இதுபோன்ற ஒரு நிலை நமதூருக்கு வந்துவிடக் கூடாது என்று விளக்கமாக எடுத்துரைத்தேன். கேட்டபாடில்லை.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்குப் போட்டியிட்ட நம்மவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒன்பது பேர். முடிவு என்ன தெரியுமா?

இந்த பேரூராட்சிப் பகுதியின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களுக்குத் தலைவர் திரு. அருணாச்சலம் அவர்கள். நாம் அருணாச்சலத்தைக் குறை சொல்லவில்லை. அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆனால், நாம் எப்போது நம்முடைய பலவீனத்தை உணர்ந்து பலத்தை நிரூபிக்கப் போகிறோம்?

சமுதாயத்தில் அமைப்புகளும், இயக்கங்களும் பல்வேறு பெயர்களில் இருந்தாலும் அரசியலில் ஒன்றுபட்டு, ஒரு தலைமையில் நின்றுவிட்டால் நம்மை மீறி வெற்றிகள் எங்கே போய்விடும்?

முஸ்லிம் லீக் பேரியக்கம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறது. அந்த விடியலை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம்.

வல்ல இறைவன் துணைபுரிவானாக!

இன்ஷா அல்லாஹ்.



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டுகோள்!


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,திருத்தம் நீக்கம் சமந்தமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அனைவருக்கும் பரப்ப அமீரக காயிதேமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம்.லியாகத்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.அடுத் தாண்டு  ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்கு கிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர்,நகராட்சி ஆணையர்,தாசில் தார் அலுவலகங்கள்,அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களி லும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க,நீக்க,திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம்.மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம்,பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும்.அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு
சென்னையில்:சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும்,சென்னை மாநகராட்சி ஆணைய ருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்:கடந்த பொதுத் தேர்தலின்போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர். பெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம் என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க  8ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ன படிவம் தேவை?
வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம்  எண்  6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.
படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இதை கவனத்தில் கொண்டு தாயகத்தில் இருக்கும் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்கள்,திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் உடனடியாக இதை செய்யத் தூண்டும் விதமாக  அமீரகம் முழுவதிலும் இருக்கும் நமது சமுதாய மக்களின் கவனத்திற்கும்  இந்த தகவலை எத்தி வைக்கும் பணியை நமது அமீரக காயிதேமில்லத் பேரவையின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
குத்தாலம்.ஏ.லியாகத் அலி.
தலைவர்,அமீரக காயிதேமில்லத் பேரவை.

Wednesday, October 26, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளருக்கு துபையில் வரவேற்பு!





இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொருளாளரும்,கர்நாடகா மாநிலத் தலைவருமான தஸ்தகீர் இப்ராஹிம் ஆகாவை துபை விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.புதன் இரவு துபை விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பில் பொதுச் செயளாலர் முஹம்மது தாஹா,பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்,துணைப்பொருளாளர் இக்பால்,ஊடகத்துறை செயளாலர் முதுவை ஹிதாயத்,,கடையநல்லூர் ஹபீபுல்லாஹ்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, October 25, 2011

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை பாராட்டு

தமிழகத்தில் நடை பெற்று முடிந்த உள் ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனித்துப் போட்டியிட்டு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் கணிசமான அளவு வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற் றுள்ள அனைவரையும் அமீரக காயிதெ மிலலத் பேரவை மனதார பாராட்டி மகிழ்கிறது.

இதற்காக கடுமையாக உழைத்த அத்துணை நல் லுள்ளங்களுக்கும், ஒத்து ழைப்பு நல்கிய ஜமாஅத்தி னர்களுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்கிறது.

மேலும், தனிச் சின்னத் தில் போட்டியிடும் முடிவு இளம் தலைமுறையின ருக்கு உற்சாகத்தை வழங்கி யுள்ளது. இத்தகைய முடிவுக்கு காரணமாக இருந்த தாய்ச்சபையின் தன்னிகரில்லாத தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் மற்றும் நிர்வாகிகளுக் கும் அமீரக காயிதெ மில்லத் பேரவை நன்றியும், பாராட்டையும் தெரிவித் துக் கொள்கிறது.

இவ்வாறு குத்தாலம் லியாகத் அலி தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, October 24, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அலுவலக திறப்பு விழா காரை அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயரை புதுச்சேரி மாநில அரசு சூட்டும் புதுவை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். எச். நாஜிம் அறிவிப்பு

புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் `சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப்� பெயர் விரைவில் சூட்டப் படும் என புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் அறிவித் தார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காரைக்கால் மாவட்ட தலைமை அலு வலக திறப்பு விழா 22-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு காரைக்கால் காயிதெ மில்லத் வீதியில் நடைபெற்றது.

காரை மாவட்டத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலப் பிரதிநிதி எம்.எஸ். குத்புதீன், மாநில துணைத் தலைவர் முன்னிலை வகித் தார். மவ்லவி ஏ. ரஹம துல்லாஹ் கிராஅத் ஓதி னார். காரை மாவட்டச் செயலாளர் ஏ. முஹம்மது அலி அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.

காயல் மகபூப் எம்.ஏ.கே. சகாபுதீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மகபூப் காரை மாவட்ட அலுவ லகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் எம்.ஏ.கே. ஷஹாபுதீன், சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா, காரை முபாரக் ஆகியோர் உரை யாற்றினர்.

இந் நிகழ்ச்சியில் வாழ்த் துரை வழங்கிய புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப் பினர் ஏ.எம்.எச். நாஜிம் குறிப்பிட்டதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்தால் நேசிக்கப் படும் இந்த இயக்கம் ஒரு அற்புதமான அமைப்பு. இந்த நிகழ்ச்சி ஒரு பய னுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. காரணம் இங்கு உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செய லாளர் பல அரிய கருத் துக்களை தெரிவித்தார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷ யங்களை சொல்லி விழிப் புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டு கொண்டார்

மத்திய - மாநில அரசு கள் முஸ்லிம் சமுதாயத் திற்கு வழங்குகின்ற எண் ணற்ற நலத் திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகைகள் நம் சமுதா யத்தை முழுமையாக சென்றடைய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மிக மிக அவசியம்.

பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா

பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா குறிப்பிட்டதாக கூறி ஒரு கோரிக்கை நிறை வேற்றித்தருமாறு காயல் மகபூப் இங்கே கேட்டுக் கொண்டார்.

அந்த கோரிக் கையான காரைக்கால் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது. அந்த கோரிக்கை விரைவில் நிச்சயம் நிறைவேறும்.

கடந்த ஆட்சியின் போதே சட்டசபையில் இதற்கான கேள்வியை நான் எழுப்பி இதற்காக ஒரு பரிசீலனை கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் சாதகமான அறிக்கையை சமர்ப்பித் துள்ளது. முஸ்லிம் சமுதா யத்தோடு பாசமாக உள்ள புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களும் இதில் அக்கறை கொண் டுள்ளதால் விரைவில் இதற் கான அறிவிப்பு வெளியி டப்படும் என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

தி.மு.க. தலைவர் கலைஞர் காரைக்கால் வந்த சமயத்தில்தான் நான் என்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன். அப்போது மேடையில் இருந்த சிராஜுல் மில்லத் அவர்கள்தான் கலைஞரி டம் என்னை அறிமுகப் படுத்தினார்கள். நிகழ்ச்சி முடிந்து நான் அவர்களை சந்தித்தபோது உங்கள் தந்தையின் இயக்கத்தில் ஈடுபடாமல் இன்னொரு கட்சியில் சேர்ந்து விட் டீர்களே எனக் கேட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, சமுதாயத் தொண்டை மறந்து விடாதீர்கள் என வாழ்த்தினார்கள். அதை நான் இன்றைக்கும் மறக்க வில்லை. சிராஜுல் மில்லத் அவர்களின் உயர்ந்த பண்பாடு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த அடிப்படையில் நான் சமுதாய கடமையை தொடர்ந்து செய்து வரு கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். எத்தனை அமைப்புகள் சமுதாயத்தில் தோன்றினா லும் அத்தனை அமைப்பு களுக்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான். இதை சமுதாயம் உணர்ந்து கொண்டு ஒன்றுபட வேண்டும்.

இவ்வாறு ஏ.எம்.எச். நாஸிம் எம்.எல்.ஏ., குறிப் பிட்டார்.

பங்கேற்றோர்

இந் நிகழ்ச்சியில் இஸ் லாமிய தமிழ் இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், டெபுடி ரீஜினல் காஜி பஷீர் மரைக் காயர், நாகை வடக்கு மாவட்ட செயலா ளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் அபூ ஃபாரிஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த பிரமுகர் அற முரசு அப்துல் காதர்,

காரை மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் துணைத் தலைவர்கள் எம்.ஏ. முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ. அப்துல் மஜீத், ஏ. ஹாஜா கமால், எஸ்.எம். ஆலியா மரைக்காயர்,

மாவட்ட துணைச் செயலாளர்கள் எம். அபுல் ஹசன், எம்.ஏ. முஹம்மது சாலிஹ், ஏ. அக்பர் அலி, எம்.யூ. முஹம்மது இஸ்மா யில், கவுரவ ஆலோசகர்கள் ஏ. ஹாலித் மரைக்காயர், எச். இக்பால் அன்சாரி, ஏ.கே.எம். யாசீன் மற்றும் ஹாபிஸ் ஏ. ஹாஜா மைதீன், பசும்பொன் முகைதீன், நஸ்ருதீன்,

இளைஞரணி அமைப் பாளர் ஒய். முஹம்மது உசைன், மக்கள் தொடர்பு செயலாளர் என்.கே. சாகுல் ஹமீது ரிபாயி, எஸ். ஜுபைர், ரஹமத்துல்லாஹ், ஹாலித், எஸ். இப்ராஹீம், எம். சலீம், கே. ஃபைசல், எம். அஸார், எம். சாகுல், ஏ. ரிஸ்வான், முஹ்ஸின், எம். ஆஸிக், எஸ். ஆரிஃப் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

காரைக்கால் மாவட்டப் பொருளாளர் பியூட்டி எம். முஹம்மது ஆரிப் நன்றி கூறினார்.

Saturday, October 22, 2011

இ. யூ. முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் 115 இடங்களில் வெற்றி தனிச் சின்னத்தில் களம் கண்டு வெற்றி பெற்றோர் விவரம்

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. 


பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது.

மொத்தம் போட்டியிட்ட 394 இடங்களில் 45 இடங்களில் மட்டுமே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களிலும் தனித்தே போட்டியிட்டு சமுதாய மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலில் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் களத்தை சந்தித்தது.

தாய்ச்சபை ஊழியர்களின் மன உறுதியினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரை காப்பாற்ற வேண்டும், தாய்ச்சபையின் தனித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்திட தேர்தலை சந்தித்தனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பண பலம், படை பலத்தோடு தேர்தலை சந்தித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் சமு தாயத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தங்களுக்கு இருக்கும் நல்மதிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்தித்தனர்.

போட்டியிட்ட 394 இடங்களில் 115 இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றது.

வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவரம் வருமாறு:

நகர்மன்ற உறுப்பினர்கள் 

கடையநல்லுhர்
1) சுலைஹாபீவி 12-வது வார்டு
2) முபாரக் 13
,, 3) கே.எம்.அப்துல் லத்தீப் 14 ,,
4) முகைதீன் பாத்து 15 ,,
5) முஹம்மது இபுராஹிம் 19 ,,
6) கே.எம்.செய்யது மசூது 20 ,,

தென்காசி

7) எம்.செய்யது ஆபில் 25 ,,

புளியங்குடி

8) ஏ.முகைதீன் பிச்சை 20 ,,
9) எஸ்.அல்மஹதி 22 ,,

இராமநாதபுரம்
10) கே.ஷேக் தாவூது 19

நாகப்பட்டினம்
11) ஏ.சகாபுதீன் 34 ,,

ஆம்பூர்
12) பிலால் பாஷா 17 ,,
13) அத்தீகுல்லாஹ் 22 ,,
14) இக்பால் அஹமது 24 ,,
15) சிராஜுன் நிஷா 25 ,,
16) அம்ரின் முக்தியார் 6 ,,

குளச்சல்
17) ஏ.சாதிக் 18

பேர்ணாம்பட்
18) வி. அப்துல் பாட்சா 19 ``
19) எஸ். பர்வீன் அப்துல் மாலிக் 21 ``

காயல்பட்டினம்
20) கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா 4 ``

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்

1) கானை - அமீர் அப்பாஸ்
2) நீலகிரி நீலக்கோட்டை - பசீர்
3) ஜாப்ராபாத் - நஜ்முன்னிசா

ஊராட்சி மன்ற தலைவர்

1) வழுத்தூர் - தமிழ்ச் செல்வன்
2) வல்லம் - திவான் ஒலி
3) குர்னிகுளத்துப்பட்டி தேவர்மலை -அப்துல் மஜித்
4) திருச்சி இனாம்குளத்தூர் - மும்தாஜ் பேகம்
5) விழுப்புரம் கானை - ஏ. பரீதா பேகம்
6) நெல்லை பத்தமடை - அல்லாபிச்சை
7) இராமநாதபுரம் செம்பட்டையார்குளம் - எஸ். பிலாலுதீன்
8) இராமநாதபுரம் பெருநாழி- அப்துல் ரஜாக்
9) நெல்லை சம்மன்குளம் - டி.பி.எம். ரெசவு முஹம்மது
10) நெல்லை பொட்டல்புதூர்- ஏ. ஹஸன் பக்கீர்
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

பெருநாழி
1) கப்பார் கான் - 5

பண்டாரவாடை
2) வி.ஆர். குர்ஷித் பஷீர் - 8 ��

வழுத்தூர்
3) ஷாஜஹான் என்ற கமாலுதீன்-3��
4) சபீனா பேகம் -4��
5) ஹபீப் கனி -5��
6) முஹம்மது ஷெரிப் -6��

< சக்கராபள்ளி
7) அபுதாஹிர் -3��
8) முஹம்மது இப்ராஹிம் பைசல் - 4
9) ஜுபைதா கனி - 8 ��
10) உம்மு ஹானி - 9 ��
11) ஜெய்னுல் ஆபிதீன் - 12��
12) ஜி. முஹம்மது இஸ்மாயில் - 5

புலிவலம்
13) எம். சாதுல்லாஹ் - 7 ��

மங்கலம்
14) எச். ரபீயுதீன் - 4 ��
15) ஆயிஷாமா - 9 ��

பெருநாழி
16) சீனி செய்யது இப்ராஹிம் - 3 ��

தரைக்குடி
17) ஆர் சேட் - 1

நரிப்பையூர்
18) கே. சிக்கந்தர் - 11

செல்வனூர்
19) ஹசீனா பேகம் - 5

வாலாந்தரவை
20) உம்மத் நிஷா - 7

ரகுநாதபுரம்
21) ராஜன் பேகம் - 6

அரிகேசவநல்லூர்
22) பி.கே. புகாரி - 9
23) ஏ. பாத்திமா - 10

பாம்புகோயில்சந்தை
24) சே.த. தீன் ஒலி - 5
25) அ. இப்ராஹிம் மூசா - 3

சம்பன்குளம்
26) காசி - 1
27) பாத்திமா - 9
28) சாகுல் ஹமீது - 5

ரவணசமுத்திரம்
29) பீர் முஹம்மது பி.ஏ.வி.எல் - 2
30) கே.எம். அமான் அலி - 4
31) முஹம்மது அன்சாரி - 5
32) நாகூர் அம்மாள் செய்யதலி பாத்திமா - 8

கனகராம்பட்டு
33) அப்துல் ஹாதி - 3

ஈசநத்தம்
34) இளம்பிறை சித்தீக் அலி

ஜமீன் ஆத்தூர் அம்மாபேட்டை
35) அன்வர் அலி - 2

பழவேற்காடு
36) அப்துல் வஹாப்

நிலாக்கோட்டா விலாங்கூர்
37) கே.பி. ஹம்சா -5
38) கே.கே. நாசர் - 13

பிதர்காடு
39) ஜீஹரா பீவி -3
சேரன்கோடு
40) உமர் - 2
41) செய்யது அலி மௌலவி -

சாம்பவர் வடகரை
42) வி. பக்ருதீன்

அலுன்டு வலங்கூர்
43) கே.வி. ஹம்சா
பாக்காலா

44) நாசர்

முதலியார்பட்டி
45) ஷேக் முகைதீன் - 7

மாலிக் நகர்
46) திவான் பக்கீர் மைதீன் - 5

மேட்டூர் ரஹ்மானியாபுரம்
47) ஹமீதாள் பீவி - 6
48) வி. அப்துல் காசிம் - 12
வி.கே. புதூர்
49) டி. காதர் முகைதீன் - 4

அருளாட்சி
50) அக்பர் - 5

வீராணம்
51) எம். அப்துல் முத்தலிப் - 3
52) எம். அமானுல்லாஹ் - 4
53) எஸ். முஹம்மது இப்ராஹிம் - 5
54) பாத்தி முத்து - 8

கலிநீர் குளம்
< 55) அனிஷா பேகம் - 2

குத்துக்கல் வலசை
< 56) எம்.பி. கௌஸ் கனி - 6

தேன்பொத்தை
57) முஹம்மது உசேன் - 2

பத்தமடை
58) ஹஸன் காதர் - 4
59) மானிஸ்டர் முஹம்மது -5
60) செய்யா முஹம்மது - 6
61) சாஜிதாள் - 7
62) மலிகாமலி - 8
63) தர்ம கபீர் - 9

ஓவர்ச்சேரி
64) கே.இ.ஸலாமத் பேகம் -1
65) ஏ.எம்.தமீம் அன்சாரி -2
பேரூராட்சி உறுப்பினர்கள்
லெப்பைக் குடிக்காடு
1) தாவூத் அலி 1-வது வார்டு

தேவர் சோலை
2) வி.கே. ஹனீபா 7

கோட்டகுப்பம்
3) ஆமினா பானு 10 ,,
4) ஜரீனா பேகம் 11

`` பள்ளிகொண்டா
5) சி.எஸ்.கதிர் அஹமது 1 ,,
6) தாகிரா முகைதீன் 2

லால்பேட்டை
7) மிஸ்பாஹுன்னிசா 6 ,,
8) ஷேக் தாவூது 7 ,,

சாத்தான்குளம்
9) முஹம்மது இஸ்மாயில் 10 ,,

வாசுதேவநல்லுhர்
10) ஆயிஷா பீவி 5 ,,

ஜாப்ராபாத்
11) தாஜீன் நிசா 4 ``

முத்துப்பேட்டை
12) கோல்டன் தம்பி மரைக்காயர் 15 ``

ஆர்.எஸ். மங்கலம்
3) மத்லூப் ஜஹன் 12 ``

சேரன்மாதேவி
14) பி.எம். கமால் பாட்சா 11 ``

நெல்லை ஏர்வாடி
15) எம். பீர் முஹம்மது 9 ``

மேலச் சேவல்
16) ஜன்னத் மீரம்மாள் 8 ``
17) நெய்னா முஹம்மது 9 ``

Tuesday, October 18, 2011

மும்பை பிரதான சந்திப்பிற்கு `குலாம் மஹ்மூது பனாத்வாலா சவுக்� பெயர் சூட்டப்பட்டது தேசியத் தலைவர் இ. அஹ்மது, முரளி தியோரா எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர். 1965-ம் வருடத்தில் மும்பை சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களை சந்தித்து தாய்ச் சபையில் இணைந்தார். ஆசிரியராக பணி துவங் கிய ஜி.எம். பனாத் வாலா சாஹிப் இரண்டு முறை மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

அந்த காலகட்டத்தில் கருத்தடை சட்டம், வந்தே மாதரம் கட்டாயம் படிக்க வேண்டும் போன்ற சட்டங் களை எதிர்த்து கையெ ழுத்து இயக்கம் போன்ற போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர். எந்த ஒரு விஷயத்திலும் முழுமை யான ஞானம் பெற்றவர். மிகச் சிறந்த பேச்சாளர். வாதத் திறமை மிக்கவர்.

இதனை கருத்தில் கொண்ட மறைந்த கேரள கேசரி சி.எச். முஹம்மது கோயாவின் வேண்டு கோளை ஏற்று தேசிய அரசியலில் பங்கேற்று மிகச் சிறப்பாக பணியாற் றினார்.

ஜி.எம். பனாத்வாலா சாஹிபால் முன் மொழியப் பட்ட ஷரீஅத் சட்ட தனிநபர் மசோதா ராஜீவ் காந்தி பாரதப் பிரதமராக இருந்தபோது இந்திய அரசால் எற்றுக் கொள் ளப்பட்டது.

ஷரீஅத் போராட்ட வீரராக விளங்கிய ஜி.எம். பனாத்வாலா சாஹிபை பாராட்டி தமிழக முஸ்லிம் கள் `முஜாஹிதெ மில்லத்� என்ற பட்டம் வழங்கி கவுரவித்தனர். உலகின் தாய் பாராளுமன்றமான பிரிட் டன் அரசு `சிறந்த பாராளு மன்றவாதி� என்ற பட் டத்தை வழங்கி கவுர வித்தது. ஜி.எம். பனாத் வாலா சாஹிப் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில மாநாடாகும்.

இந்திய முஸ்லிம்களின் இணையற்ற தலைவராக விளங்கிய முஜாஹிதெ மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிபின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மகா ராஷ்டிரா அரசு மும்பை யின் முக்கிய பகுதிகளில் உள்ள இப்ராஹீம் ரஹ்ம துல்லாஹ் மற்றும் இப் ராஹீம் மெர்ச்சன்ட் சாலைகளுக்கு இடையி லான சந்திப்பு பகுதிக்கு """"குலாம் மஹ்மூது பனாத் வாலா சவுக்�� என பெய ரிடப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி 16-10-2011 காலை 11 மணிக்கு முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்க தலைவர் டாக்டர் ஏ.ஆர். சோமர் தலைமையில் நடைபெற்றது. பெயர் பலகையினை முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய மனித வள மேம் பாடு மற்றும் வெளிவிவ கார இணையமைச்சரு மான இ. அஹ்மது சாஹிப் திறந்து வைத்தார். பாராளு மன்ற உறுப்பினர்கள் மிலன்த் துவேரா, ஈ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், மவ் லானா ஆஜாத் பொருளா தார கழகத் தலைவர் அமீன் படேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் தஸ்தகீர், இப்ராஹீம் ஆகா, தேசிய செயலாளர்கள் குர்ரம் அனீஸ் உமர், இஸ்மாயில் பனாத் வாலா, முதன்மை மாநக ராட்சி உறுப்பினர் அக் லாக் அன்சார், அலி முஹம் மது ஷம்ஷி, மும்பை மாநகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சி.எச். அப்துல் ரஹ்மான், யூசுப் ஹுசைன் முஜாவர், மாநி லத் தலைவர் சமீயுல்லாஹ் அன்சாரி உள்ளிட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் பல் வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Friday, October 14, 2011

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும் !அப்துல் ரஹ்மான்.எம்.பி

துபாயில் 2-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.துவக்க விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.
விழாவில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் ( வேலூர் ), அழகிரி ( கடலூர் ), ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, மலேசிய துணைத் தூதர் சம்சுதீன்,
தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாரமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், இந்தியா கிளப் சேர்மன் சித்தார்த் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்த மாநாட்டில் ‘அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும்’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தன் தாய்மொழியாம் தமிழில் உரை நிகழ்த்துவதை பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது,
எம்.பி.க்கள் நலத்திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியை எங்களது கையில் தந்துவிடுவதாக மக்கள் நினைக்கின்றனர். அதுஅப்படியல்ல. மக்களின் நலத்திட்டங்களான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத் தான் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
சீன கப்பல் மாலுமியினை ஜப்பானில் கைது செய்தபோது சீன அரசு அக்குடிமகனை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, பாகிஸ்தானில் 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்ட போது அந்நாடு மேற்கொண்ட முயற்சியையும் பார்த்தோம். இந்நிலையில் நமது இந்திய அரசு நமது சகோதர இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பாதிக்கப்படும் போது எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது எனபதனை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். ஒரு சில எச்சரிக்கை அறிவிப்புகளோடு அவை நின்று விடுவது வருந்தத்தக்கது.
இலங்கையில் தமிழர்களது மறுவாழ்வுக்காக இந்திய அரசு வழங்கிய நிதி எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டது எனபது கேள்விக்குறியே?
இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து தாய்நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணி அரசுக்கு ஒரு முக்கிய வருவாயாகும். இப்படிப் பாடுபடும் இந்தியர்கள் தாய்நாடு திரும்பினால் அவர்களது மறுவாழ்வுக்கு அரசு எத்தகைய திட்டங்களை தீட்டியுள்ளது எனபதை நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் மூலம் ஓய்வூதியம், காப்பீடு எனப் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினாலும் அவை இன்னும் செயல்வடிவம் பெறாதது வருத்தத்திற்குரியது.
தாய்நாட்டுக்காக தியாகம் செய்திடும் வெளிநாடு வாழ் இந்தியர்களது மறுவாழ்வுக்கு அரசு உதவிட வேண்டிய தருணம் இது.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையம் மூலம் மேற்கொண்டு வரும் சேவைகள் அளப்பரியது. இது போன்ற மையங்களை இந்தியர்கள் வாழ்ந்து வரும் பல்வேறு நாடுகளிலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்னும் அவை செயல்வடிவம் பெறாதது வருத்தத்திற்குரியது.
எது எப்படியிருப்பினும் சாதி, மதம், இனம் என எவ்வித வேறுபாடும் காட்டாது இந்தியர் எனும் உணர்வோடு தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பினை இம்மாநாடு ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் ஏ.ஏ. ஜின்னா, சென்னை தமிழ் வணிக அமைப்பின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
‘வணிக வாய்ப்புகளும் சட்டத்துறைப் பணிகளும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கிற்கு நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன் தலைமை தாங்கினார். ‘இந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் முதலீட்டு வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி ஆர். சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஆந்திர அரசு தொழில் துறை ஆணையர் கரிகால்வளவன், ஆஸ்திரியா டாக்டர் வி. ஜெபமாலை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் முனைவர் பி. முனியாண்டி, மாஸ்கோ ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
‘வணிகத் தொடர்புக்குத் தமிழ் மொழியும், வணிகத் தொழில் நுட்பமும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் கே. திலகவதி, ராணிமேரி கல்லூரி முனைவர் இராஜேஸ்வரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் எழிலரசி பாலசுப்பிரமணியன், கவிதா தேவர், பிரேமா, வசந்தாள், முனைவர் அல்போன்ஸா, முனைவர் மரிய தெரசா, டி. தங்கமணி, ஆசிப் மீரான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
விழாவின் இறுதியில் மத்திய இணை அமைச்சர் நாரயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தகவல்: முதுவை ஹிதாயத்

Thursday, October 13, 2011

�உண்மைச் சாரமும் அது வெளிச்சமாகும் நேரமும்� - பிறைமேடை தலையங்கள் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி



பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் இக்காலக் கட்டத்தில் கூட்டணி உடன்பாடு என்றில்லாமல் தனித்துக் களம் காணுகிற சூழ்நிலை ஏற்பட்டதால் நம்மவர்களின் உற்சாகமிக்க செயல்பாடுகள் மிகத் தெளிவாகப் பளிச்சிடுகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினர் கொண்டிருக்கும் உற்சாகமும், உத்வேகமும் உள்ளத்திற்கு உவகை தந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பாட்டப்பத்து முகம்மது அலி அவர்களின் மகளான காதர்பீவி அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது சமுதாய மக்களிடம் உருவான ஒருமித்த கருத்தும், சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளும் ஆரோக்கியமான ஆதரவை நல்கியதும், எல்லா ஜமாஅத் நிர்வாகிகளும் அற்புதமாக அணிவகுத்து ஆர்த்தெழுந்ததும் கண்கொள்ளாக் காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நாளிதழ்கள் அனைத்தும் முகப்புச் செய்தியாக �இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்� என்று மிகப் பெரிய அளவிலெல்லாம் செய்திகள் வெளியிட்டு படிப்பவர்களுக்கெல்லாம் பரவசத்தை ஏற்படுத்தியது. காரணம் வேட்பாளர் பொறியாளர், பட்டப்படிப்பு படித்தவர்; மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய பெண்; எல்லோரிடத்திலும் எளிமையாகப் பழகக்கூடிய அமைதியான அணுகுமுறை; இவற்றையெல்லாம் தாண்டி அவரின் தந்தையார் முகம்மது அலி முஸ்லிம் லீகின் துடிப்புமிக்க பொறுப்பாளர்; அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளிடமும், எல்லா ஜமாஅத் பிரமுகர்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர். எல்லாம் இருந்தும் என்ன செய்வது! வேட்பாளரின் பெயர் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத காரணத்தால் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் வேட்பாளரின் பெயர் அந்தந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பது விதி.

தலைமையிலிருந்து சுற்றறிக்கையின் மூலமாகவும் �மணிச்சுடர்�, �பிறைமேடை� இதழ்கள் மூலமாகவும் தெரியப்படுத்தியும் எத்தனை பேர் அதனைப் படித்து செயல்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியே. அப்படி அவரின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிராததாலும், பட்டியலில் சேர்க்க கால அவகாசம் இல்லாததாலும் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆணை ஒன்று பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அணுகினோம். நானே நேரில் சென்று வாதிட்டேன். நீதிமன்ற ஆணையைவிட தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைத்தான் பின்பற்ற முடியும் என்று சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்துவிட்டதால் இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற ஆணையை மீறிவிட்டதாக கலெக்டர்மீது நாம் வழக்குத் தொடர்ந்திருந்த போதிலும், தேர்தல் விதிமுறைகளை நம்மவர்கள் முறையாகத் தெரிந்து வைக்காததன் விளைவாக ஒரு நல்ல வாய்ப்பினை இழந்திருக்கிறோம்.

ஏறத்தாழ 3 லட்சம் வாக்காளர்கள் உள்ள திருநெல்வேலி மாநகராட்சியில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் நமது சமுதாயத்தின் ஏகோபித்த ஆதரவும், மற்ற சமூகத்து மக்களின் பரவலான ஆதரவும் இருக்கிற காரணத்தால் மேயராக எளிதில் வெற்றி பெறவியலும் என்கிற நிலை கற்பனையாகிப் போனது. இல்லையென்றால் தமிழகத்தின் மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையில் மிளிர்ந்திருக்கும். அதுமட்டுமல்ல; சமுதாயம் ஒன்றுபட்டால் எதனையும் சாதிக்க முடியும் என்பதும் நிரூபணம் ஆகியிருக்கும். இதையே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சமுதாய ஒற்றுமைக்கு ஒரு நல்லவழிகூட கிடைத்திருக்கக்கூடும். வாய்ப்பு நழுவிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வரக்கூடிய காலங்களிலாவது இன்ஷா அல்லாஹ் ஒன்றுபட்டு செயலாற்றிட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய நாடுவோம். தொடர்ந்து கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, புளியங்குடி, கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, சென்னை மாநகராட்சி என்று பல்வேறு பகுதிகளில் நம் முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கும், ஆங்காங்கே புரிதலுடன் களம்காணும் தி.முக. மேயர் வேட்பாளர்களுக்கும் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இந்த தேர்தல் சுற்றுப் பயணத்தில் நான் கண்ட உண்மைச் சாரம் என்ன தெரியுமா?

நம் சமுதாயத்திலுள்ள எல்லா அமைப்புகளும் தனித்தனியே வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தி, சிறுபான்மை முஸ்லிம்கள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்டு சமுதாயத்தின் வாக்குகளைப் பிரித்து, தங்களுக்கே பாதகமாக்கிக் கொண்டு போட்டியில் களம் காணும் இன்னொருவருக்கு வாய்ப்பினை உருவாக்கி அவரை வெற்றி பெறச் செய்யக்கூடிய காரியம் பல இடங்களில் அரங்கேறியிருப்பதுதான் வேதனையின் உச்ச கட்டம்.

இந்த நிலை மாற வேண்டாமா? எப்போது? தேர்தல் முடிவுற்று, தேர்தல் முடிவுகளும் வெளியாகி மேற்சொன்ன உண்மைச் சாரம் வெட்ட வெளிச்சமாகும் நேரத்தில் நம்மில் ஒற்றுமையை உணர்வோர் எத்தனை பேர்? உணர்வது மட்டும் போதாதே!

��உணர்ந்து செயல்படுவது எல்லாவற்றிற்கும் மேலானது�� என்பதுதான் பாரபட்சமின்றி சமூகத்திலுள்ள நம் எல்லோருக்கும் கிடைக்கும் பிடிப்பினை. இதனையே முஸ்லிம் லீக் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.

காலம் கனியும்; நம்பிக்கை வீண்போகாது.

இன்ஷா அல்லாஹ்.

Tuesday, October 11, 2011

நேர்மையான நிர்வாகமும்,ஊழல் புரிய முடியாத நிலையும் உருவாக இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்!



                               
  -குத்தாலம் ஏ.லியாகத் அலி-தலைவர்,அமீரக காயிதெமில்லத் பேரவை
                                                      ஐக்கிய அரபு அமீரகம்.

மிழக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற இருக்கும் இவ்வேளையில் அனைத்து கட்சிகளும்,அமைப்பினரும் தேர்தல் பணிகளிலும் பிரச்சாரங்களிலும் மும்முரமாக இருக்கின்ற இத்தருணத்தில் சமுதாயம் சார்ந்த சில விஷயங்களை உங்கள் அனைவர்களின் கவனத்திற்க்கும் கொண்டு வருவதை கடமையாக கருதுகிறது அமீரக காயிதெமில்லத் பேரவை.

என்றுமில்லாத அளவில் வாக்காளர்களும்,வேட்பாளர்களும் அவரவர் கடமைகளை செய்ய தயாராகிவிட்ட இத்தருணத்தில்,சமுதாய அமைப்புகளின் வேட்பாளர்களும் களத்தில் நிற்பது பெரும்பாலான இடங்களில் அதிகரித்துள்ளதை அனைவரும் அறிவோம்.

மிக முக்கியமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களின் ஊரின் நிர்வாகத்தை கையில் எடுக்க பல்முனைப்போட்டி உருவாகி விட்ட சூழலில், நல்லவர்கள் யார், நன்மைகளை செய்யக்கூடியவர்கள் யார் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் அனைத்து தரப்பினரும் பிரச்சாரத்தில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள தயக்கம் காட்டாத இச்சூழலில்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் எப்படி தேர்தல்களை அணுகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்று நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

 நாடாளுமன்றம்,சட்டமன்றம்,உள்ளாட்சி அமைப்புகள் என இன்று வரை பொறுப்பு வகித்து வந்துள்ள எந்த முஸ்லிம் லீக் உறுப்பினரோ தலைவரோ எந்த வித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் இருந்து வந்துள்ளதை மவுனமாய் சமுதாய மக்கள் பேசி வருவதை காணும் இவ்வேளையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் வேட்பாளராகவும்,அவருக்கு பணி செய்பவர்களாகவும் இருக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்தாக வேண்டும்.

சமுதாய நலனையே நாளெல்லாம் சிந்தித்து செயலாற்றும் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பாளர்கள் என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து சமுதாயத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவு வைத்து தனித்து களம் காண்கிற செய்தி உணமையிலேயே பிரம்மிக்க வைக்கின்றது.
 “ஜனநாயகத்தின் ஆணிவேர் ” என சிறப்பிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தாய்ச் சபை முஸ்லிம் லீக் பிரதி நிதிகள் செல்வதன் மூலம் நேர்மையான நிர்வாகமும்,ஊழல் புரியமுடியாத நிலையும்,எந்த கட்டப் பஞ்சாயத்தும்,வெற்று பஞ்சாயத்தும் எடுபடாத வகையில் உண்மையான பஞ்சாயத்து ராஜ்யம் நடைபெற வழி வகை ஏற்படும் என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு
ஆளும்கட்சி,எதிர்கட்சிகள் போன்று பணபலமும்,மற்றவர்கள் செய்வது போல் வசூல் பாக்கிகளையும் வைத்து தேர்தலை சந்திக்காமல் சொந்த பணத்தில்,சமுதாயத்தின் முன்மாதிரிக் கட்சி என்று பேரெடுத்த பேரமைப்பு இத்தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் அதற்காக அனைவரும் தவறாமல் அல்லாஹ்விடம் இறைஞ்சுவதோடு,அமீரகம் முழுவதும் பரவி வாழும் சமுதாய சொந்தங்கள் மறக்காமல் தங்கள் குடும்ப வாக்குகளை தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கு வழங்கி மீண்டும் ஒரு வரலாறு உருவாக உறுதுணை புரியுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Photobucket