-குத்தாலம் ஏ.லியாகத் அலி-தலைவர்,அமீரக காயிதெமில்லத் பேரவை
ஐக்கிய அரபு அமீரகம்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற இருக்கும் இவ்வேளையில் அனைத்து கட்சிகளும்,அமைப்பினரும் தேர்தல் பணிகளிலும் பிரச்சாரங்களிலும் மும்முரமாக இருக்கின்ற இத்தருணத்தில் சமுதாயம் சார்ந்த சில விஷயங்களை உங்கள் அனைவர்களின் கவனத்திற்க்கும் கொண்டு வருவதை கடமையாக கருதுகிறது அமீரக காயிதெமில்லத் பேரவை.
என்றுமில்லாத அளவில் வாக்காளர்களும்,வேட்பாளர்களும் அவரவர் கடமைகளை செய்ய தயாராகிவிட்ட இத்தருணத்தில்,சமுதாய அமைப்புகளின் வேட்பாளர்களும் களத்தில் நிற்பது பெரும்பாலான இடங்களில் அதிகரித்துள்ளதை அனைவரும் அறிவோம்.
மிக முக்கியமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களின் ஊரின் நிர்வாகத்தை கையில் எடுக்க பல்முனைப்போட்டி உருவாகி விட்ட சூழலில், நல்லவர்கள் யார், நன்மைகளை செய்யக்கூடியவர்கள் யார் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் அனைத்து தரப்பினரும் பிரச்சாரத்தில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள தயக்கம் காட்டாத இச்சூழலில்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் எப்படி தேர்தல்களை அணுகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்று நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றம்,சட்டமன்றம்,உள்ளா ட்சி அமைப்புகள் என இன்று வரை பொறுப்பு வகித்து வந்துள்ள எந்த முஸ்லிம் லீக் உறுப்பினரோ தலைவரோ எந்த வித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் இருந்து வந்துள்ளதை மவுனமாய் சமுதாய மக்கள் பேசி வருவதை காணும் இவ்வேளையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் வேட்பாளராகவும்,அவருக்கு பணி செய்பவர்களாகவும் இருக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்தாக வேண்டும்.
சமுதாய நலனையே நாளெல்லாம் சிந்தித்து செயலாற்றும் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பாளர்கள் என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து சமுதாயத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவு வைத்து தனித்து களம் காண்கிற செய்தி உணமையிலேயே பிரம்மிக்க வைக்கின்றது.
“ஜனநாயகத்தின் ஆணிவேர் ” என சிறப்பிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தாய்ச் சபை முஸ்லிம் லீக் பிரதி நிதிகள் செல்வதன் மூலம் நேர்மையான நிர்வாகமும்,ஊழல் புரியமுடியாத நிலையும்,எந்த கட்டப் பஞ்சாயத்தும்,வெற்று பஞ்சாயத்தும் எடுபடாத வகையில் உண்மையான பஞ்சாயத்து ராஜ்யம் நடைபெற வழி வகை ஏற்படும் என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு
ஆளும்கட்சி,எதிர்கட்சிகள் போன்று பணபலமும்,மற்றவர்கள் செய்வது போல் வசூல் பாக்கிகளையும் வைத்து தேர்தலை சந்திக்காமல் சொந்த பணத்தில்,சமுதாயத்தின் முன்மாதிரிக் கட்சி என்று பேரெடுத்த பேரமைப்பு இத்தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் அதற்காக அனைவரும் தவறாமல் அல்லாஹ்விடம் இறைஞ்சுவதோடு,அமீரகம் முழுவதும் பரவி வாழும் சமுதாய சொந்தங்கள் மறக்காமல் தங்கள் குடும்ப வாக்குகளை தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கு வழங்கி மீண்டும் ஒரு வரலாறு உருவாக உறுதுணை புரியுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment