Wednesday, September 28, 2011

முஸ்லிம் லீகின் குரல் கம்பீரமாக ஒலிக்கும்�� பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.

பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு! 

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

தலைநகர் டில்லியில் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த சமயம் & செப்டம்பர் & 5 ஆம் நாள் காலை 9 மணி.

டில்லி & நார்த் அவென்யூவில் எனக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்களும் என்னோடு.

திடீரென வீட்டில் புகுந்த இருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னைச் சந்திக்க வேண்டும் என்றனர். நீங்கள் யார்? என்று வினவினேன். சென்னை ஸிஷிஷி இயக்கத்தின் தலைவராகப் பணிபுரியும் ஜி. சங்கர் என்றும் அருகிலுள்ளவர் டில்லியில் இருக்கும் பஜ்ரங்தல் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டனர். சகோதரர் ஷேக் அப்துல்லாஹ்வின் அதிர்ச்சியையும், வியப்பையும் புரிந்து கொண்டு, அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு பேச்சைத் தொடங்கினோம்.

��எந்த முன் அறிவிப்பும் அனுமதியும் இல்லாமல் திடீரென அவசர, அவசரமாக நீங்கள் இருவரும் வந்திருப்பதன் நோக்கம்? சங்கர் : பாராளுமன்றத்தில் �வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட மசோதா� தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது முழுக்க, முழுக்க சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு மட்டுமே சாதகமாகவுள்ளது. இந்து சமூகத்திற்கு எதிரான போக்கில் தென்படுகிறது. இதனை நீங்கள் எதிர்த்து வாதிட வேண்டும்.

நான் : என்னை யார்? என்று தெரிந்துதான் வந்திருக்கிறீர்களா? அல்லது ஒரு தமிழ்நாடு எம்.பி.யைச் சந்திக்கிறோம் என்று வந்துள்ளீர்களா? சங்கர் : இல்லை. நீங்கள் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த எம்.பி. என்று தெரியும். சமூக நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும் மதிப்பு தரக்கூடிய பேரியக்கம் முஸ்லிம் லீக். தெரிந்துதான் வந்திருக்கிறேன். நீங்கள் இந்த மசோதாவை முழுமையாகப் படித்துப் பார்த்தால் நான் சொல்வது உண்மை என விளங்குவீர்கள்.

நான் : நீங்கள் சொல்வதில் தவறில்லை. ஆனால் தவறுகளே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வரும் பல்வேறு சம்பவங்களை ஆய்ந்த பிறகுதான் இப்படிப்பட்ட மசோதாவைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? 1992&ல் பம்பாயில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் அரசாங்கத்தின் துணையோடு நடைபெற்றன என்று கிருஷ்ணா கமிஷன் அறிக்கை சொல்லவில்லையா? சிறுபான்மை முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனரே! முஸ்லிம் வீடுகளில் காவல் துறையினரும், மதவெறிக் கூட்டத்தாரும் அத்துமீறி புகுந்து பச்சிளங்குழந்தைகளைக் கதற, கதற கொன்று, கணவனுக்கு எதிரே மனைவி கற்பழிக்கப்பட்டு, பிள்ளைகளுக்கு எதிரே பெற்றோர்கள் சித்திரவதை செய்யப்பட்டு காட்டு மிராண்டித்தனமான அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டார்களே! அப்போது காவல்துறை எந்த புகாரையாவது முஸ்லிம்களிடமிருந்து பெற்றதா? சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் நிராயுதபாணியாக நின்றதே! இதுபோன்ற நிகழ்வு நடைபெற்று ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து இந்த மசோதா தயாரிக்கப்பட்டது தாமதமான செயல் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?

குஜராத் மாநிலத்தில் மோடியின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியதே! இன்னமும் தொடர்கிறதே; பார்க்கவில்லையா? அரசு இயந்திரம் முழவதும் முடுக்கிவிடப்பட்டு வெறியாட்டம் ஆடியபோது முஸ்லிம் குடும்பத்தார்கள் உயிரோடு வீட்டுக்குள் பூட்டி வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டனரே. அப்போது எங்கே போனீர்கள்? முஸ்லிம்களின் குரல்கள் அரசுக்கு எட்டியதா? இந்த வெறியாட்டத்திற்கு அரசாங்க மூத்த அதிகாரிகளே, மோடியால் ஏவப்பட்ட நிகழ்வுகளை இப்போது ஒவ்வொரு அதிகாரியாக முன்வந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே! பார்க்க வில்லையா? துணிந்து உண்மைகளை உறித்து வைத்துக் கொண்டிருக்கிற இந்த அதிகாரிகள் இப்போது அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்கிற செய்தி வந்தவண்ணம் இருக்கிறதே! இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. இதற்குப் பிறகும் இத்தகைய சட்டம் உருவாக்கப்படவில்லையென்றால் சிறுபான்மையினரின் நிலை என்னவாகும்? என்கிற கேள்விக்குறியைத் தவிர வேறு என்ன பதில் இருக்கிறது? சங்கர் : ஜிகாத் என்ற பெயரில் கொலைகளைச் செய்யும் பாதகங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இவைகள் இந்து சமுதாயத்திற்கு எதிரான செயல்திட்டங்கள் அல்லவா? நான் : யாராக இருந்தாலும் வன்முறைக்குத் தீர்வு வன்முறையாக இருக்க முடியாது; இருக்கக் கூடாது. கண் எதிரே தன் மனைவியையும் குழந்தைகளையும் கொன்று குவித்த வெறிச் செயலைக் கண்டவர்கள் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் செல்லுகிறபோது �ஜிஹாத்� என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். ஆனால், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறவர்கள் யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவர்கள். ஜிஹாத் என்கிற வார்த்தையை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசுகிற நீங்கள் அரசு எந்திரத்தையே முழுமையாகப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் அவிழ்த்துவிடப்பட்டனவே! அவைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? குறைந்தபட்சம் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த �வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட மசோதா� ஒரு சிறு ஆறுதலைத் தருகிறது. இருந்தபோதிலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறபோது என்னென்ன மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வரப்போகிறதோ? தெரியவில்லை. முதலில் இந்தச் சட்டம் அமுலுக்கு வரட்டும்.

சங்கர் : நீங்கள் இந்த மசோதாவை நியாயமாக அணுக வேண்டும்.

நான் : நிச்சயமாக, நியாயமாகவே அணுகுவோம். முதலில் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள முயற்சியுங்கள்.

எங்களின் கலந்துரையாடல் இவ்வாறாக நீண்டு கொண்டே போனது. மனித நேயத்தை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாம் தரும் படிப்பினைகளைத் தான் எங்கள் தலைவர்கள் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளனர். பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டபோது இந்தியாவிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாகிஸ்தான் அதிபர் லியாகத் அலிகான் குரல் கொடுத்தார். அப்போது பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் முறையாக நடத்துங்கள்; எங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று குரல் கொடுத்த தலைவர் கண்ணியமிக்க காயிதே மில்லத். எனவே எங்களைப் பொறுத்தவரையில் எந்த நிலையிலும் காழ்ப்புணர்வுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். எந்தச் சமூகமும் எங்களுக்கெதிரானவர்கள் அல்ல.

நாங்கள் நல்லவர்களாவே இந்த நாட்டில் வாழ்வதற்கு உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அவசரமாக இன்னொரு வேலை இருக்கிறது என்று கிளம்பிச் சென்றுவிட்டனர்.

பிறை நெஞ்சே! எண்ணிப்பார். ஒரு சட்ட மசோதா தங்களுக்கு சாதகமில்லை என்றவுடன் மதவெறியுணர்வுடன் செயலாற்றும் பஜ்ரங்தல் என்ற இன்னொரு அமைப்பையும் அழைத்துக் கொண்டு ஸிஷிஷி இயக்கத் தலைவர் டில்லியில் எப்படியெல்லாம் அலைகிறார்?

இந்த புதிய மசோதாவின் மையக் கருத்து யாதெனில் சிறுபான்மை சமுதாயம் மதக்கலவரங்களால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறபோது இந்த சமுதாயத்தவரின் அழுகுரல்கள் புறக்கணிக்கப்படாமல் காது கொடுத்து கேட்க வைக்கும் யுக்தியைத் தான் வலியுறுத்திச் சொல்கிறது. இது அவர்களுக்குக் கசப்பாகத் தெரிகிறதாம். பிடிக்கவில்லையாம். நியாயமான கோணத்தில் இந்த சட்ட மசோதாவைத் தயாரிக்கும் மத்திய அரசைப் பாராட்டுவோம். அதே நேரத்தில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய முனைப்பு காட்டப்படுகிறது? என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

�இந்தச் சட்டத்தை தொடக்க நிலையிலேயே எதிர்க்க வேண்டும்� என்று தமிழகத்தின் ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கு ஜெயலலிதா அம்மையாரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கே ஸிஷிஷி கருத்துக்கும் ஜெயலலிதாவின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஒரே குரல். உருவம் மட்டும் வேறு. சிறுபான்மை சமூக மக்களின்பால் கொஞ்சமாவது கரிசனம் இருக்குமேயானால் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்தச் சட்ட மசோதாவை வரவேற்க வேண்டும். தனது எதிர்ப்புக் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சியின் கூட்டணியிலுள்ள எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக நீதியின் உயிரோட்டத்திற்கு மதிப்பளித்து முதலமைச்சரின் போக்கை மாற்ற குரல் கொடுப்பார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனாலும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் லீகின் குரல் இந்தச் சட்ட மசோதாவை ஆதரித்து, கம்பீரமாக ஒலிக்கும் என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்கிறோம்.

No comments:

Post a Comment

Photobucket