Tuesday, September 27, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு

தமிழகத்தில் 2011 அக்டோபர் 17,19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இருகட்டமாக நடைபெற இருக்கிறது.

இந்தத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கித் தரும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் செய்ய வேண்டியவை குறித்து இச்சுற்றறிக்கையை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருகிறோம்.

செப்டம்பர் 29ம் தேதிக்குள்ளாக வேட்பு மனுக்கள் முறைப்படி நிரப்பப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வேட்பு மனு தாக்கலுக்கு முன் வாக்காளர் ஜாபிதாவை வாங்கி பார்வையிட்டு அதற்கு முரண்பாடில்லாத வகையில் நிரப்ப வேண்டும். வேட்பு மனுவில் முன் மொழிபவர் பெயர் முகவரியும் கவனமாக பதிவு செய்யப்பட வேண்டும்.தேவைப்படும் சான்றிதழ்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது �படிவம் சி�யையும் இணைத்து கொடுக்க வேண்டும். �படிவம் சி� தான், வேட்பாளர் எந்த கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் என்பதை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கும் படிவமாகும்.

எனவே �படிவம் சி�யை நிரப்பும் போது """"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்�� என சரியாக குறிப்பிட வேண்டும்.

வேட்பு மனு திரும்ப பெரும் தேதிக்கு முன்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் �படிவம் பி� யையும், அதனுடன் �படிவம் ஏ` யையும் சேர்த்து வழங்க வேண்டும்.

�படிவம் பி�யில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கையெழுத்திட்டிருப்பார். பொதுச் செயலாளருக்கு கையெழுத்திடும் அதிகாரம் வழங்கி �படிவம் ஏ`யில் மாநிலத் தலைவர் கையெழுத்திட்டிருப்பார். இவை வழங்கப்பட்டால் மட்டுமே கட்சி வேட்பாளராக ஏற்கப்பட்டு நம் கட்சிக்காக ஒதுக்கப்படும் சின்னம் வேட்பாளருக்கு கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரே சின்னம் ஒதுக்கித் தர தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருகால் தனிச் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டாலும் சுயேட்சை சின்னம் பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அனைவருக்கும் இந்த சுற்றறிக்கை கிடைக்கச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் துரிதமாக செயலாற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தனித்தன்மையையும், வலிமையையும், பெருமையையும் நிலைநாட்ட அன்புடன் வேண்டுகிறோம்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment

Photobucket