பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் இக்காலக் கட்டத்தில் கூட்டணி உடன்பாடு என்றில்லாமல் தனித்துக் களம் காணுகிற சூழ்நிலை ஏற்பட்டதால் நம்மவர்களின் உற்சாகமிக்க செயல்பாடுகள் மிகத் தெளிவாகப் பளிச்சிடுகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினர் கொண்டிருக்கும் உற்சாகமும், உத்வேகமும் உள்ளத்திற்கு உவகை தந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பாட்டப்பத்து முகம்மது அலி அவர்களின் மகளான காதர்பீவி அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது சமுதாய மக்களிடம் உருவான ஒருமித்த கருத்தும், சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளும் ஆரோக்கியமான ஆதரவை நல்கியதும், எல்லா ஜமாஅத் நிர்வாகிகளும் அற்புதமாக அணிவகுத்து ஆர்த்தெழுந்ததும் கண்கொள்ளாக் காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நாளிதழ்கள் அனைத்தும் முகப்புச் செய்தியாக �இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்� என்று மிகப் பெரிய அளவிலெல்லாம் செய்திகள் வெளியிட்டு படிப்பவர்களுக்கெல்லாம் பரவசத்தை ஏற்படுத்தியது. காரணம் வேட்பாளர் பொறியாளர், பட்டப்படிப்பு படித்தவர்; மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய பெண்; எல்லோரிடத்திலும் எளிமையாகப் பழகக்கூடிய அமைதியான அணுகுமுறை; இவற்றையெல்லாம் தாண்டி அவரின் தந்தையார் முகம்மது அலி முஸ்லிம் லீகின் துடிப்புமிக்க பொறுப்பாளர்; அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளிடமும், எல்லா ஜமாஅத் பிரமுகர்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர். எல்லாம் இருந்தும் என்ன செய்வது! வேட்பாளரின் பெயர் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத காரணத்தால் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் வேட்பாளரின் பெயர் அந்தந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பது விதி.
தலைமையிலிருந்து சுற்றறிக்கையின் மூலமாகவும் �மணிச்சுடர்�, �பிறைமேடை� இதழ்கள் மூலமாகவும் தெரியப்படுத்தியும் எத்தனை பேர் அதனைப் படித்து செயல்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியே. அப்படி அவரின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிராததாலும், பட்டியலில் சேர்க்க கால அவகாசம் இல்லாததாலும் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆணை ஒன்று பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அணுகினோம். நானே நேரில் சென்று வாதிட்டேன். நீதிமன்ற ஆணையைவிட தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைத்தான் பின்பற்ற முடியும் என்று சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்துவிட்டதால் இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற ஆணையை மீறிவிட்டதாக கலெக்டர்மீது நாம் வழக்குத் தொடர்ந்திருந்த போதிலும், தேர்தல் விதிமுறைகளை நம்மவர்கள் முறையாகத் தெரிந்து வைக்காததன் விளைவாக ஒரு நல்ல வாய்ப்பினை இழந்திருக்கிறோம்.
ஏறத்தாழ 3 லட்சம் வாக்காளர்கள் உள்ள திருநெல்வேலி மாநகராட்சியில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் நமது சமுதாயத்தின் ஏகோபித்த ஆதரவும், மற்ற சமூகத்து மக்களின் பரவலான ஆதரவும் இருக்கிற காரணத்தால் மேயராக எளிதில் வெற்றி பெறவியலும் என்கிற நிலை கற்பனையாகிப் போனது. இல்லையென்றால் தமிழகத்தின் மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையில் மிளிர்ந்திருக்கும். அதுமட்டுமல்ல; சமுதாயம் ஒன்றுபட்டால் எதனையும் சாதிக்க முடியும் என்பதும் நிரூபணம் ஆகியிருக்கும். இதையே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சமுதாய ஒற்றுமைக்கு ஒரு நல்லவழிகூட கிடைத்திருக்கக்கூடும். வாய்ப்பு நழுவிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வரக்கூடிய காலங்களிலாவது இன்ஷா அல்லாஹ் ஒன்றுபட்டு செயலாற்றிட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய நாடுவோம். தொடர்ந்து கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, புளியங்குடி, கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, சென்னை மாநகராட்சி என்று பல்வேறு பகுதிகளில் நம் முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கும், ஆங்காங்கே புரிதலுடன் களம்காணும் தி.முக. மேயர் வேட்பாளர்களுக்கும் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இந்த தேர்தல் சுற்றுப் பயணத்தில் நான் கண்ட உண்மைச் சாரம் என்ன தெரியுமா?
நம் சமுதாயத்திலுள்ள எல்லா அமைப்புகளும் தனித்தனியே வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தி, சிறுபான்மை முஸ்லிம்கள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்டு சமுதாயத்தின் வாக்குகளைப் பிரித்து, தங்களுக்கே பாதகமாக்கிக் கொண்டு போட்டியில் களம் காணும் இன்னொருவருக்கு வாய்ப்பினை உருவாக்கி அவரை வெற்றி பெறச் செய்யக்கூடிய காரியம் பல இடங்களில் அரங்கேறியிருப்பதுதான் வேதனையின் உச்ச கட்டம்.
இந்த நிலை மாற வேண்டாமா? எப்போது? தேர்தல் முடிவுற்று, தேர்தல் முடிவுகளும் வெளியாகி மேற்சொன்ன உண்மைச் சாரம் வெட்ட வெளிச்சமாகும் நேரத்தில் நம்மில் ஒற்றுமையை உணர்வோர் எத்தனை பேர்? உணர்வது மட்டும் போதாதே!
��உணர்ந்து செயல்படுவது எல்லாவற்றிற்கும் மேலானது�� என்பதுதான் பாரபட்சமின்றி சமூகத்திலுள்ள நம் எல்லோருக்கும் கிடைக்கும் பிடிப்பினை. இதனையே முஸ்லிம் லீக் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.
காலம் கனியும்; நம்பிக்கை வீண்போகாது.
இன்ஷா அல்லாஹ்.

No comments:
Post a Comment