Sunday, March 10, 2013

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்! அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்! அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் வாழ்த்து!

பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியலில் நேர்மை,பேச்சில் கண்ணியம்,மார்க்கத்தில் பிடிப்பு என அனைத்து தளங்களிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தகண்ணியத்திற்குரிய நேதா காயிதேமில்லத் அவர்களின் அப்பழுகற்றத் தலைமையில் சுதந்திரத்திற்குப்
பின் இந்திய இஸ்லாமியர்களின் வாழ்வியலுக்கு அடிகோளிட்ட தினம்தான் மார்ச் 10!

இந்த நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பிரைமரிகளிலும் கொடியேற்றுவிழாக்கள் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வரும் இன்நாளில்,தாய்ச்சபையின் எழுச்சிமிக்க தொண்டர்களுக்கும்,அதன் தலைவர்களுக்கும் அமீரக காயிதேமில்லத் பேரவையினரின் வாழ்த்துக்களை   மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்.!

பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வெளியிட்டுள்ள செய்தியில்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை உறுவாக்கி நல்ல தலைவர்களையும் தொண்டர்களையும் கொண்ட ஒரு பேரியக்கமாக மிளிரச் செய்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் அனைத்து குணங்களையும் ஒருங்கே பெற்றுத் திகழும் நம் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் அவர்களின் தலைமையில் அணிவகுக்க சூளுரைக்கும் இன்றைய தினத்தில்,
சமுதாய இளைஞ்சர்கள் சீர்கேடான பாதைக்கு சென்றிடாமல் வாழ்க்கையின் வெற்றி வசந்தங்களை அனுபவிக்க, சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்திட,உரிமைகளைப் பெற்று கண்ணியத்தோடு வாழ்ந்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயலாற்றிட அன்புடன் அழைக்கின்றோம். 

பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில்:

எதற்காகவும் எதையும் விட்டுக்கொடுக்காமல் தேசிய நீரோட்டத்தில் பீடு நடை போடும் இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
தமிழ் நாட்டைப் பொருத்தவரை தமிழ் உணர்வோடு வாழக் கற்றுக் கொடுத்த இயக்கம் முஸ்லிம் லீக்.இதன் தலைவர்கள்,"இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்று முழங்கி இந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் லீக்கை மையமாக தங்களின் அரசியல் பேரியக்கமாக கருதி வாழ வித்திட்டுள்ளார்காள். ஒட்டு மொத்தமாக சொல்லுவதென்றால் இந்திய முஸ்லிம்களுக்கு முகவரி தந்த நாள் தான் மார்ச் 10. இந்த வரலாற்று தினத்தில் நம்முடைய நிறுவனத் தலைவர் கண்ணியத் தென்றல் காயிதேமில்லத் அவர்களின் நிழலாக வலம் வந்த சிராஜுல் மில்லத் அவர்களின் அரசியல் வாரிசாக தாய்ச்சபையை கட்டுக் கோப்போடு வழி நடத்திச் செல்லும் முனீருல்மில்லத் பேராசிரியர் அவ்ர்களின் தலைமைக்கும் வலிமை சேர்க்க உறு ஏற்போமாக! 

  

No comments:

Post a Comment

Photobucket