Thursday, November 8, 2012

துபையில் புருனை காயிதேமில்லத் பேரவைத் தலைவருக்கு வரவேற்பு!


புருனை காயிதேமில்லத் பேரவையின் தலைவரும்,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலருமான அல்ஹாஜ்.ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு துபாய் ரமதா ஹோட்டலில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.






 பேரவைத் தலைவர் அல்ஹாஜ் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பின் போது,சமீபத்தில் வெளியிடப்பட்ட மணிச்சுடர் வெள்ளிவிழா மலரை அமீரகத் தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி வெளியிட,புருனை காயிதேமில்லத் பேரவைத் தலைவர் ஜஃபருல்லாஹ் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் கும்பகோணம் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அமைப்புச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலர் வாலான் ஜெய்லான் பாட்ஷா, துபை மண்டலச்செயலாளர் முதுவை ஹிதாயத்,அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,தேரா பகுதி செயலாளர் அய்யம்பேட்டை ராஜாஜி காஸிம்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்பின் போது தாய்ச்சபை மற்றும் காயிதேமில்லத் பேரவைகளின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.



இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அங்கீகரிக்கப்பட பேரமைப்பாக வெளி நாடுகளில் காயிதேமில்லத் பேரவைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Photobucket