இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னணிப் பிரமுகர் ரப்பானி அப்துல் குத்தூஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று 23.10.2012 செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் முதுபெரும் ஊழியராக திகழ்ந்த, தய்ச்சபை தலைமை நிலையத்தின் மூத்த அலுவலர் ரப்பானி அப்துல் குத்தூஸ் அவர்கள் இன்று அதிகாலை இறைவன் நாட்டப்படி வபாத்தானார்.
சென்னை மாவட்ட பொறுப்புக்களில் சிறப்புடன் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற மணிச்சுடர் வெள்ளி விழாவில் தலைவர் பேராசிரியரால் கவுரவிக்கப்பட்டது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அல்லாஹ்வின் நாட்டப்படி மறைவடைந்து விட்ட பெரியவர் ரப்பானி அப்துல் குத்தூஸ் அவர்களின் கப்ரை பிரகாசமாக்கிட அனைவரும் பிரார்த்திப்போம்.
அவர் பிரிவால் துயரப்படும் அவர்தம் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை பெற்றிட அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment