இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளரும் டெல்லி மாநிலத் தலைவருமான குர்ரம் அனீஸ் உமர் மூன்று நாள் பயணமாக துபாய் வந்தள்ளார்.அவருக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் எதிர் கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடலும் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான், ஆகியோர் பேரவையின் எதிர்கால செயல்பாடுகளை எவ்வாறு அமைத்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விளக்கினர்.விரைவில் துபை சோனாப்பூர்,அபுதாபி ஐகாடு பணியாளர்கள் முகாம்களில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசிய குர்ரம் உமர் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சிறப்பான பணிகளை வெகுவாகப் பாராட்டியதுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் தனது செயல்பாடுகளை விரிவு படுத்தி வரும் இவ்வேளையில் காயிதெமில்லத் பேரவையின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் கட்சியின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நுற்றாண்டு வரலாறு மூன்றாம் பாகத்தை தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் வெளியிட முதல் பிரதியை அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலியும் இரண்டாம் பாகத்தை அமைப்புச்செயலாளர் லால்பேட்டைஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,துபை மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத்,மூன்றாம் பாகத்தை அபுதாபி மண்டல மக்கள் தொடர்புச்செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப்,மக்கள் தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின்,கொள்கை பாரப்புச்செயலாளர் கடயநல்லூர் ஹபீபுல்லாஹ்,தேரா பகுதி செயலாளர்கள் அய்யம்பேட்டை ராஜாஜி காசிம், வி.களத்தூர் சாகுல் ஹமீது,ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹையத்தீன்,ஆவணியாபுரம் முஹம்மது ஜுனைத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment