பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் சிறை வாசிகளை கருணை அடிப் படையில் விடுதலை செய்வ தற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அவர்களை பற்றிய சிறை நன்னடத்தை குறித்து தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை செய்ய வேண்டும் என எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி தமிழக சிறைத்துறை கூடுதல் இயக்குனர் ச.கு.டோக்ராவை சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந் தித்துப்பேசினார் அப்போது அவர் சில பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன் வைத்து நிவர்த்திக்க கோரி னார்.
குறிப்பாக பத்து ஆண்டு களுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது; ஆனாலும் ஏதா வதுதொன்றை காரணம் காட்டி பலரது விடுதலைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட விசேட நாட்களில் குறைந்த காலம் சிறையில் இருந்த பலர் விடுதலை செய்யப்பட்டனர் ஆனால் பதினான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித் தவர்களெல்லாம் கூட இன் னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.
எனவே பத்தாண்டுக்க ளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களின் விடு தலைக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சிறையில் அவர் களின் நன்னடத்தை குறித்து தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துறை செய்ய வேண்டும்.
சிறை மாற்றம் செய்யப்பட்ட கைதிகள்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி களில் சிலர் வேறு வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி இட மாற்றம் செய் யப்பட்டவர்கள் ஏற்கனவே நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் அவர்கள் குடும் பங்கள் தாங்க முடியா கஷ்ட சூழ்நிலைக்கு ஆளாகி தவித்து வருகின்றன. கோவை சிறை யில் வந்து பார்ப்பதற்கே கஷ் டப்பட்ட அவர்களின் குடும் பத்தார் இப்போது தொலை தூரங்களில் உள்ள சிறை களுக்கு சென்று பார்ப்பது என்பது சாத்தியமற்றது.
எனவே வேறு வேறு சிறை களுக்கு மாற்றம் செய்யப்பட்ட சிறைவாசிகளை மீண்டும் கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்து அவர்கள் குடும்பத்தார் துயரங்களை போக்க வேண்டும்.
ஆயுள் சிறைவாசியாக கோவையில் இருக்கும் அபூ தாஹிர் இரு சிறுநீரகங்களும் செயல்படாமல் தன் இளமை வாழ்வை தொலைத்தவர்.
இப்போது அவரது கண்களிலும் பார்வை மங்கி வாழ்வதற்கே சிரமப்படுகிறார்.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சியில் பரோலில் சென்று சிகிட்சை பெற்று திரும்பினார். இப்போது மீண்டும் அவர் சிகிட்சை பெற பரோலில் விடுவிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார்.
எனவே கடந்த தடவைகள் அவர் பரோலில் சென்றபோது சிறை நடத்தை விதிகளை முற்றிலும் பின்பற்றியதை அடிப்படையாக வைத்தாவது அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி குறிப்பிட்டார் அவரது கோரிக்கைகளை கவனமாக கேட்ட சிறைத்துறை கூடுதல் இயக்குனர் டோக்ரா ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment