அல்லாஹ்வின் திருநாமத்தால்...
* இந்திய முஸ்லிம்களின் உரிமைகளை நிலை நாட்டிடவும்,அவர்கள் தங்களது கலாச்சார தனித் தன்மைகளை பேணி பாதுகாத்திடவும்...
* அரசியல் ரீதியாக அனைத்து முஸ்லிம்களும் இணைந்து பணியாற்றிடவும்...இன்னும் பல்வேறு உயிரணைய பிரச்சினைகளுக்காவும் அவைகளுக்கு நல்ல தீர்வுகளை கண்டிடவும் துவக்கப்பட்டதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இந்த பேரியக்கத்தின் தன்னலமற்ற சேவைகளில் சில வெற்றிப் படிகளை காண்போம்...
* இந்தியாவில் நமது உயிரணைய ஷரியத் சட்டத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றபோது விடிய விடிய நாடாளுமன்றத்தை நடக்க வைத்து தடைகளை தகர்த்தெரிந்து வெற்றி கண்ட பேரியக்கம்..
*ஷாபானு வழக்கின் போக்கை அறிவுப் பூர்வமாக அணுகி அகிலமே வியக்கும் வகையில் நாடாளும் வர்க்கத்தினரையே தன்னகத்தாக்கிக் கொண்ட தாய்ச் சபையின் வரலாற்றை மறக்க எவராலும் இயலாது...
* மாநிலங்களில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்களுக்கு மத்திய மாநில அரசுப் பணிகளில் முறையான இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கம்..
* முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்த ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைய பெரும் காரணமாய் இருந்த பேரியக்கமும் இதுவே...
* இறந்து விட்ட இஸ்லாமிய உடல்களையும் எறியூட்டப்பட வேண்டும் என்கிற சட்டம் நிறைவேற இருந்த சமயத்தில் அதை தகர்த்தெரிந்து இஸ்லாமிய வழிமுறைப்படியே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உரிமையை நிலை நாட்டிய பெருமைக்குரிய இயக்கம்...
* தமிழகத்திலும்.மத்தியிலும் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த மகத்தான இயக்கம்
* தமிழகத்தில் உலமா நல வாரியம் அமைக்க பெரும் துணை புரிந்த பேரியக்கம்...
* கட்டாய திருமண பதிவு சட்டத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் பள்ளிவாசல்களின் தப்தர் பதிவை அங்கீகரித்து அதையே பதிவு சான்றிதழாக ஏற்க வேண்டும் என தொர்ந்து குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்ட சமுதாயப் பேரியக்கம்.
* வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஏற்பட தன்னை அர்ப்பனித்து வெற்றி கண்ட இயக்கம்...
* மாநிலத்தில் ஆள்வோரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ரீதியில் மத்திய அரசை மட்டும் குற்றச்சாட்டும் இயக்கமல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதை சமீபத்தில் கூட பறைசாற்றிய நெஞ்சுரம்மிக்க இயக்கம்...
செய்வதை எல்லாம் சொல்லி விளம்பரம் செய்து பழக்கமில்லாத இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு இதுவே தடையாகுமோ என்கிற நமது இளைஞர்களின் ஏக்கத்தை போக்கும் வகையிலேயே வருங்கால தலைமுறையினரும் இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தன்னலமற்ற சேவைகளை அறிந்து கொள்ளும் விதமாக அமீரக காயிதெமில்லத் பேரவை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களையும் அமீரக காயிதேமில்லத் பேரவையின் பங்களிப்பில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இன்ஷா அல்லாஹ் வரும் மார்ச் 10ம் நாள் வெளியிடப்பட இருக்கிறது.இந்த மூன்று பாகங்களும் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து சந்திப்போம்...
சொடுக்கி கேளுங்கள்
ReplyDelete>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<
சொடுக்கி கேளுங்கள்
2. >>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.
இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<
.