இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இந்தியாவில் இருக்கும் கட்சிகளிலேயே மிக மூத்த அரசியல் கட்சி எனும் பெருமையை பெற்று விளங்குகிறது.இக்கட்சியின் வேட்பாளர்கள் பலர் தேர்தல்களில் ஏணிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் கூட்டணியின் சின்னங்களிலும் களம் கண்டுள்ளனர்.
ஆனால் சமீப காலமாக கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவதில் தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டுவதால் அனைத்து கட்சியினரும் தனிச் சின்னத்தில் போட்டியிடவே விரும்புகின்றனர்.அந்த வரிசையில் முஸ்லிம் லீக் கட்சியும் தனது சொந்த சின்னமான ஏணி சின்னத்தையே இனி வரும் காலங்களில் பயன்படுத்த இருக்கின்றது.மக்கள் மத்தியில் மிகவும் அறிமுகமான ஏணி சின்னத்தை அகில இந்திய அளவில் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு உ.பி மற்றும் உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஏணிச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கட்சியான முஸ்லிம் லீகிற்கு அகில இந்திய அளவில் ஏணி சின்னம் கிடைக்கும் முயற்சியின் முதல் வெற்றியாக இதை அக்கட்சியினர் கருதுகின்றனர்.- ராஜராஜாளி
No comments:
Post a Comment