நடைபெறவுள்ள உத்தரபிர தேசம், உத்தரகாண்ட் மாநிலங் களின் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிடுகி றது. தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான இ.அஹமது சாஹிப் ஒப்புதலுடன் 16 தொகு திகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடை பெறவுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இத்தேர்தலில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத் தரப்பிரதேசத்திலும், உத்தர காண்ட் மாநிலத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி யிடுகிறது.
உத்தர பிரதேசம்
உ.பி. சட்டப்பேரவை தேர்த லில் போட்டியிடும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பட்டியல் தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் ஒப்புதலு டன் தேர்தல் பார்வையாளர் குழுவில் இடம் பெற்றுள்ள வழக் கறிஞர் இக்பால் அஹமது, குர் ரம் அனீஸ் உமர், முஹம்மது குட்டி ஆகியோர் வெளியிட்டுள் ளனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு
1. மௌலானா கவுஸர் ஹயாத் கான் (மொராதாபாத் ரூரல் ), 2. டாக்டர் முஹம்மது மதீன் கான் (அயோத்தியா ) 3. ஜாவீத் கான் (ஆக்ரா தெற்கு), 4. ஜெகதீஷ் மோஹர் (ஆக்ரா கன்டோண்மெண்ட்-தனி) 5. முஹம்மது காலிக் (ஆக்ரா வடக்கு), 6. ஹாஜி ராஹத் அப்ரோஸ் (ஷிகோ ஹாபாத்), 7. ஜமீர் ஹசன் அன்சாரி (நஜிபாபாத்), 8. டி.பி. சிங் (நெஹ்தார் -தனி), 9. டாக்டர் கலீம் அஷ்ரப் (சம்பல்).
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பார்வையாளர் குழுவினர் தேசி யத் தலைவர் இ.அஹமது சாஹிபின் ஒப்புதலோடு, உத் தரகாண்டம் சட்டப்பேரவை தேர் தலில் போட்டியிடும் அதிகாரப் பூர்வ வேட்பாளர்களின் பட்டி யலை வெளியிட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் இக்பால் அஹமது, நயீம் அக்தர், முஹம்மது குட்டி, குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உத்தரகாண்டத்தில் உள்ள 13 மாவட்டங்களில் டேராடூன், ஹரித்துவார், உதம் சிங் நகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஏழு தொகுதிகளில் இந் திய யூனியன் முஸ்லிம் லீக் வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு: 1. ஜமீல் ஹசன் (சஹஸ்புர்), 2. அஸீஸுர் ரஹ்மான் (தரம்பூர்), 3. வழக்கறிஞர் சீமா (ஜாவல்பூர்-தனி), 4. சத்தாம் ஹுசைன் (கான்பூர்), 5. அஸ்ரார் (லக்ஸர்), 6. காலிப் (ஹரித்துவார்ரூரல்), 7. ஷஹ்ஸாத் ஹுசைன் (காஷி பூர்).
தேர்தல் ஆணையம் அதிரடி
உத்தர பிரதேசம், உத்தர காண்டு மாநிலங்களில் இது வரை அறிவிக்கப்பட்டுள்ள இந் திய யூனியன் முஸ்லிம் லீகின் 16 வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் `ஏணி� சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் பயன் படுத்தி அரசியல் நடத்த முயலும் சில தனி நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரால் விண்ணப்பித்தனர். அவர்களு டைய விண்ணப்பங்களை இந் திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரால் ஏற்க முடியாது எனவும் அவர்களை சுயேட்சை வேட்பா ளர்களாக மட்டுமே கருத முடி யும் என்றும்தேர்தல் ஆணையம் உறுதியாக கூறிவிட்டது.
கேரளாவில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் அங்கீகரிக் கப்பட்ட சின்னம் `ஏணி� என்பதும், அச்சின்னமே உ.பி.யிலும் உத்தரகாண்டிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
மற்ற மூன்று மாநிலங்கள்
பஞ்சாப் மாநிலத்தில் காங் கிரஸ் கட்சியோடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதா லும், அம்மாநிலத்திற்கும் கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் குறித்தும் விரை வில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தலைமை அறிவித்துள் ளது.
No comments:
Post a Comment