துபாயில் அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோ ருக்கு 03.02.2012 வெள்ளிக் கிழமை காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக் கத் அலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. முஹம் மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தனது ஏற்புரையில் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார்.
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் தனது உரையில் மணிச்சுடர் நாளிதழ், பிறை மேடை மாத மிருமுறை, டைம்ஸ் ஆஃப் லீக் இயக்க வெளி யீடுகளின் விரிவாக்கப் பணிகள் குறித்தும் விவரித்தார்.
No comments:
Post a Comment