Friday, December 23, 2011

நல்ல முஸ்லிமாகவும் நல்ல முஸ்லிம் லீகராகவும்�� - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி


பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

சமூக வாழ்வியலில் நல்ல முஸ்லிமாகவும், அரசியல் வாழ்வியலில் நல்ல முஸ்லிம் லீகராகவும் வாழ்வதே சிறப்பு என்கிறது மனம்; அதனால்தானே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நமது சமுதாய தலைவர்கள் ஒன்றுகூடி �அகில இந்திய முஸ்லிம் லீக்� என்று இந்த பேரியக்கத்தை தொடங்கினார்கள். பாகிஸ்தான் தனியாகப் பிரிந்துவிட்ட பிறகு இந்த இயக்கமே இல்லாமலாகிவிட்டது என்று பிரிவினைவாதிகள் நினைத்திருந்தபோது �இந்தியாவில் கடைசி ஒரு முஸ்லிம் இருக்கிற காலம் வரையிலும் முஸ்லிம் லீக் ஜிந்தாவாக இருக்கும்�� என்று �இந்திய யூனியன் முஸ்லிம் லீக்� என்ற பெயரில் கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் தொடர்ந்தார்கள். இது வரலாறு; யாராலும் மறைக்க முடியாதது; அழிக்க முடியாதது. இதில் பின்பற்றப்படும் நெறிமுறையும், காக்கப்படும் கண்ணியமும், பேணப்படும் பண்பாடும், கொண்டிருக்கும் கொள்கை வேட்கையும் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தின் புனித வழிநின்று போற்றப்படுபவை. இதன் அரிய நோக்கத்தையோ, அளப்பரிய பணிகளையோ ஒழுக்க ரீதியாக யாரும் எளிதாகக் குறை சொல்லிவிட முடியாது.

இந்த இயக்கம்தான் சமுதாயத்திற்கு அரசியல் அரங்கில் குரல் கொடுக்கக்கூடியதாக இருக்க முடியும் என்று நம் முன்னோர்கள் காட்டித் தந்த அதே வழியில் நாமெல்லாம் தயக்கமின்றி நிற்கிறோம்; பணியாற்றுகிறோம்; பல்வேறு பொறுப்புகளைப் பெற்று செயலாற்றுகிறோம். அதே நேரத்தில் எல்லோருக்குமே தயக்கமின்றி இத்தகைய எண்ணம் மேலோங்கியிருக்கிறதா? என்றால் இல்லை. காரணங்கள் பல இருக்கலாம். ஆனால், தாய்ச்சபை முஸ்லிம் லீகின் செய்திகளையும், அதன் வரலாற்றுப் பெருமைகளையும் இந்தப் பேரியக்கத்திற்கு இணையாக இன்னொரு இயக்கத்தை இனங்காண முடியாது என்பதையும் நாம் பிறருக்கு எத்தகைய அளவில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறோம்? நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது. காரணம் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. முஸ்லிம் லீகின் அருமை, பெருமைகளைத் தெரிந்திருக்காததால் இதனைப் பற்றி உணர இயலாமல் அவ்வப்போது தெரியும் அலங்கார காட்சிகளையே மனதிற்குள் ஏற்றி பல்வேறு அமைப்புகளிலும் சிதறிக் கிடக்கின்ற சூழ்நிலையைப் பரவலாகப் பார்க்கிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், நம் இயக்கச் செய்திகள் பரவலாக்கப்பட வேண்டும்.

அதற்கு நம்முடைய செய்தித் தாள்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லோரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்படவும் வேண்டும். இன்று நம்மிடத்தில் �மணிச்சுடர்� நாளிதழும், �பிறை மேடை� மாதமிருமுறை இதழும், �டைம்ஸ் ஆஃப் லீக்� ஆங்கில மாத இதழும் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கத்திற்கும் போய்ச் சேர வேண்டிய காரியத்தைச் செய்தாலே போதுமானது.

அன்றாடச் செய்திகளைத் தாங்கிவரும் �மணிச்சுடர்� நாளிதழை சந்தா செலுத்தி வாங்குவது என்பது சற்று அதிகமான தொகைக் கொண்டதாக சிலருக்குத் தெரியலாம். ஆண்டு சந்தா ரூ.1000 என்பதை ரூ.600 என்று அறிவித்தும் நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு இலக்கை எட்ட இயலவில்லை என்பது உண்மைதான். மாதமிருமுறையாக �பிறை மேடை� தொடங்கியதற்குக் காரணமே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்று வரும்போது நம் இயக்கச் செய்திகளை மிகக் குறைந்த செலவில் பலதரப்பாருக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதால்தான். அதன் ஆண்டு சந்தா ரூ.220 மட்டும் என நிர்ணயம் செய்திருக்கிறோம். இவ்வளவு குறைவான ஒரு தொகைக்கு சந்தா சேர்ப்பது என்பது அவ்வளவு கடினமல்ல. இதைப் போலத்தான் �டைம்ஸ் ஆஃப் லீக்� என்ற ஆங்கில மாத இதழும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் ஆண்டு சந்தா ரூ.120 மட்டும்தான். ஆங்கிலத்தில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும், வெளிமாநிலங்களிலுள்ளவர்களுக்கும் இவ்விதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நாம் இங்கே குறிப்பிட விரும்புவது நம்மில் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களாவது முழுமையாக வாங்கிப் படிக்க வேண்டும்; அதன்பின் பரவலாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும். நம் இயக்கச் செய்திகளை மற்றவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க இந்த இதழ்கள்தான் மிக எளிதான காரணிகள். நாம் எவ்வளவுதான் இயக்கப் பணிகள் ஆற்றினாலும் இந்தச் செய்திகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்றால் இப்பத்திரிகைகள் வெளிவருவதின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்றும் அதற்கு நாமே தான் காரணமாக இருக்கிறோம் என்றும்தான் சொல்ல வேண்டியுள்ளது.

இதனை வலியுறுத்திதான் சென்ற 10.12.2011 சனிக்கிழமையன்று மதுரை மாநகரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் நான் பேசியபோது சற்று அழுத்தமாக வேண்டுகோள் விடுத்தேன். இந்த பத்திரிகைகள் ஓரளவாவது நம் எதிர்பார்ப்பின்படி பயணிக்குமானால், அடுத்து தொலைக்காட்சியின் வாயிலாக நம் தாய்ச்சபையின் பல்வேறு செய்திகளையும், தகவல்களையும் தருவதற்கேற்ப காரியங்கள் ஆற்ற முடியும்.

பிறைநெஞ்சே! ஊடகத்தில் நம்முடைய இலக்கை நாம் அடைந்தால்தான் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் பிடிப்பினைக் காட்ட இயலும்; அதற்கான ஒரே வழி நிர்வாகிகள் நாம் அனைவருமே சந்தாதாரராக வேண்டும்; ஆனபிறகு நம்மைச் சுற்றியுள்ளவர்களை சந்தாதாரர்களாக ஆக்க வேண்டும்.

இப்பத்திரிகைகள் அனைத்துமே நம்முடைய முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மூலமாகவே வெளிவருபவை. யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதனைக் கட்டுப்படுத்தாது. முழுக்க, முழுக்க முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு உட்பட்டவை. மேற்சொன்ன கருத்துக்களை உள்வாங்கி மாவட்ட நிர்வாகிகள் அனைவருமே தனித்தனியாக முடிவெடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்னும் எத்தனை பிரதிகளை வரவழைக்க இயலும் என்கிற இலக்கை நமது தலைமை நிலையத்திற்குத் தெரியப்படுத்துங்கள். அந்தப் பட்டியல் தயாராகிறது. இதனைப் பார்த்துத்தான் மாவட்டத்தின் பத்திரிகைப் பணியைக் கணிக்க முடியும்.

பட்டியலைப் பார்க்கிறேன்; பார்த்துவிட்டு தொடர்பில் வருகிறேன். இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment

Photobucket