அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைநகர் அபுதாபியில் 15.12.2011 வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் அமீரகம் முழுவதிற்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழகத் தலைவருமான முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாகத் அலி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருந்து வருவதை சுட்டிக்காட்டி இன்று மேலும் புத்துணர்ச்சி பெற்று அதன் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இயக்கத்தை வலுப்படுத்த முன் வந்திருப்பதை அறிந்து மகிழ்வதாக குறிப்பிட்டார்கள்.
மேலும் ஒவ்வொரு புதிய நிர்வாகிக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்தை தெரிவிக்க கேட்டுக் கொண்டார். இதன் மூலம் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயல்பாடுகள் புதிய எழுச்சியுடன் இருக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment