* டெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு எடுத்த முடிவுகளை இக் கூட்டம் வாழ்த்தி பாராட்டுகிறது. � மதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழுவின் அனைத்து தீர்மானங்களையும் இக் கூட்டம் முழுமனதுடன் ஏற்று வரவேற்று வாழ்த்துகிறது.
� * நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனிச் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் அனைவரையும் பாராட்டுவதோடு, வெற்றி வாகை சூடிய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
� * சமீபத்தில் தமிழக அரசு உயர்த்திய பால், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை அமீரக காயிதேமில்லத் பேரவை முழுமனதுடன் ஆதரித்து வரவேற்கிறது. எதிர்காலங்களில் இதுபோன்ற ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை தொடர்ந்து நடத்திடவும் தலைமையை கேட்டுக்கொள்கிறது.
� * முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்கள் வெற்றி பெற இக் கூட்டம் வாழ்த்துகிறது.
� * முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரம் பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை இக் கூட்டம் முழுமனதுடன் ஆதரிப்பதோடு, இது தொடர்பாக தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பது என்று இக் கூட்டம் முடிவு செய்கிறது.
� * இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் முனீருல் மில்லத் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணைத்தலைவர் வழக்கறிஞர் இஜாஸ் பெய்க் அவர்களின் தந்தை ஹாஜி இஸ்மாயில் பெய்க் அவர்களை அகில இந்திய உருது அகடாமியின் உறுப்பினராக நியமிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்த காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்களுக்கு இப் பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
� * இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை நூல் வடிவில் கொண்டு வரும் முயற்சியாக எழுத்தரசு ஏ.எம். ஹனீப் எழுதிய நூலின் முதல் பாகம் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு, மற்றும் முன்றாவது பாகங்களையும் வெளியிட அமீரக காயிதேமில்லத் பேரவை அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவது என முடிவு செய்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment