தியாகத் திரு நாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
இறைக்கட்டளைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகம் என்று சொன்னவுடன் நினைவிற்கு வரும் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் மன வலிமையும் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் நினைவிலும் இருந்து அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளையும் அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதிக்கு உரம் சேர்க்க இன் நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
ஈதுல் அள்ஹா எனும் இந்த தியாகத் திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய நெஞ்சங்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்!
No comments:
Post a Comment