Saturday, November 12, 2011

புனித ஹஜ் பயணம் முடித்து தலைவர் பேராசிரியர் தலைமையிலான குழுவினர் டெல்லி திரும்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் வரவேற்பு


சவூதி அரேபிய அரசின் அழைப்பின் பேரில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான 20 பேர் அடங்கிய நல்லெண்ண குழுவினர் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். 

முற்பகல் 11.30 மணிக்கு டெல்லி வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கியஅரபு அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் லியாகத் அலி, இ.யூ. முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ஜீவகிரிதரன் உள்ளிட்டோர் இந்த வரவேற்பில் கலந்து கொணடனர்.

டெல்லி திரும்பிய குழுவினர் இன்று மாலை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமதை சந்தித்து பேசுகின்றனர். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர், மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை திரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment

Photobucket