Thursday, April 7, 2011

சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் அமைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை மதுரையில் முதல்வர் கலைஞர் பேட்டி

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி உடனடியாக கிடைக்கும் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் அமைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை மதுரையில் முதல்வர் கலைஞர் பேட்டி

அரசு புறம்போக்கு நிலங்களில் முன் அனுமதி யில்லாமல் கட்டப்படும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களுக்கு உள்ளாட்சி அமைப்பு களின் அனுமதி கிடைத்திடவும், வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொள்ள விண்ணப்பித்தால் விரைந்து அனுமதித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் கலைஞர் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
அப்போது அவர் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.
அனைத்து தொகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற் பதையும், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். 
சிறுபான்மையினர் உணர்வினை மதித்து உரிமை களை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என தெரிவித்த முதல்வர், சிறுபான்மை யினர்களான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வழிபாட்டுத்தலங்களை அமைத்துக் கொள்ள எத்தகைய தடங்கல்களும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.  குறிப்பாக, அரசு புறம்போக்கு நிலங்களில் இந்து சமுதாயத்தினர் வழிபாட்டுத் தலங்களை அமைத்து பின்னர் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுக் கொள்வதைப் போன்று கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் தங்கள் வழிபாட்டுத்தலங்களை அமைத்துக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெற்றிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கள் சொந்த நிலங்களில் வழிபாட்டு தலம் கட்ட முன்கூட்டியே அனுமதி கோரி விண்ணப்பித்தால் விரைந்து அனுமதி வழங்கிடவும் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் முதல்வர் கலைஞர் தெரிவித்தார்.

(குறிப்பு: இக்கோரிக்கை சென்ற டிசம்பரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டில் இத்தீர்மானத்தை மாநில செயலாளர் லால்பேட்டை தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) 

No comments:

Post a Comment

Photobucket