திருநெல்வேலி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ. எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து நெல்லை பேட் டையில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
அப்போது அவர் கூறியதாவது-
தமிழக முதல்வர் கலைஞர் கடந்த 5 ஆண்டு களில் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அலரை 6-வது தடவையாக முதல்வராக் கினால் சொன்னதையும் செய்வார் - சொல்லாத தையும் செய்வார்.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 234 தொகுதி களிலும் வெற்றி பெறும். முதல்வர் கலைஞர் சிறு பான்மை சமுதாய மக்கள் மட்டுமல்ல, அனைத்து சமுதாய மக்களும் நல்லி ணக்கத்தோடு வாழ்வதற்கு பாடுபட்டு வருகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் தி.மு.க. கூட்ட ணிக்கு வாக்களிக்க வேண் டும்.
தி.மு.க ஆட்சியில் பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை. 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது அதிகம் பயன் பெற்றவர்கள் அதி.மு.க. வினர்தான். எனவே, இந்த அரசு என்ன செய்ய வில்லை என்பதை மனசாட்சியை தொட்டு வாக்களியுங்கள். இவ்வாறு தலைவர் பேராசிரியர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் கோதர் முகைதீன், மாநில அமைப்புச் செய லாளர் நெல்லை மஜீத், மாவட்டச் செயலாளர்கள் எல். கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மேயர்.ஏ.எல். சுப்பிரமணி யன், மாவட்ட முஸ்லிம் லீக் அமைப்புச் செயலா ளர் ஷிபா, எம்.கே.எம். முஹம்மது ஷாபி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, நெல்லை பகுதி தி.மு.க செயலாளர் உலகநாதன், மாவட்ட முஸ்லிம் லீக் துணைத் தலைவர் வீ.ம. திவான் மை தீன், புளியங்குடி எ. ஷாகுல் ஹமீது உட்பட ஏராளமான பேர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment