Sunday, April 22, 2012

அமீரக காயிதெமில்லத் பேரவை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை விநியோகம் அப்துல் ரஹ்மான் எம்.பி. மில்லத் இஸ்மாயில் பங்கேற்பு!

அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சர்வதேச காயிதெமில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயளாலர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில் ஆகியோருடன் அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் அல்ஹாஜ் குத்தாலம் ஏ.லியாகத் அலி,
பொதுச் செயளாலர் ஏ.முஹம்மது தாஹா, தணிக்கையாளர் காயல் எஹ்யா முஹையத்தீன் ஆகியோர் அபுதாபி வருகை தந்தனர்.

 அபுதாபி மண்டல புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டையை நாடாளுமன்ற உறுப்பினரும் சர்வதேச காயிதெமில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அமீரக காயிதெமில்லத் பேரவையின் புரவலர் நோபள் மரைன் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீதிடம் வழங்கினார்.

பின்னர் அமீரக காயிதெமில்ல்த பேரவையின் துணைத்தலைவர் வழக்கறிஞர் இஜாஜ் பெய்க் இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை அமீரக காயிதெமில்லத் பேரவையின் புரவலர் பனியாஸ் குழுமத்தின் நிறுவன அதிபர் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் மரைக்காயர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயளாலர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி மண்டலச் செயளாலர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத்,மக்கள் தொடர்புச் செயளாலர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,மேலப்பாளையம் அப்துல் ரஹ்மான்,கொள்ளுமேடு ஏ.முஹம்மது ஹாரிஸ்,திருமங்கலக்குடி அன்சாரி,முஹம்மது அப்பாஸ்,ஏ.எஸ்.அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Photobucket