Saturday, August 27, 2011

மயிலாடுதுறை-காரைக்குடி அகல ரயில்பாதை பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் எம்.அப்துல் ரஹ்மான் கோரிக்கை


மயிலாடுதுறை-காரைக் குடி அகல ரயில்பாதை பணிகள் விரைவாக முடிக் கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது அவர் எழுப்பிய கேள்வி விவரம் வருமாறு:

மயிலாடுதுறை-காரைக் குடி இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு அகல ரயில்பாதை பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அப் படி நிறுத்தப்பட்டு 5 ஆண் டுகளுக்கு மேலாகியும், பணிகள் முடிக்கப்பட வில்லை.

மயிலாடுதுறையில் இருந்து 38 கீ.மீ. தொலைவி லுள்ள திருவாரூருக்கு மட் டும் ரயில் பாதை தொடங் கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேலை முடிவடைய வில்லை. மீதமுள்ள திருவா ரூர்-காரைக்குடி இடை யிலான 150 கீ.மீ. தொலைவு ரயில் பாதை திட்டத்தை எப் போது தொடங்கப் போகிறீர்கள்.

கடற்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த ரயில் பாதை வரலாறு மற்றும் மத ரீதியான முக்கியத்து வமும், கொண்ட பாதை யாக உள்ளது என்பதை சுட் டிக் காட்ட விரும்புகிறேன்.

முக்கியத்துவம் வாய்ந்த பாதை

இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம், கிருத்துவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி மாதா கோவில், போன்ற திருத்தலங்களும், முத்துப் பேட்டை, அதிராம்பட்டி னம் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு மிகவும் எளி தாகியிருந்த இந்த பாதை யில் ரயில் நிறுத்தப்பட் டுள்ளதால் இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து வரக்கூடிய பயணிகள் போதிய ரயில் வசதி இல் லாமல் மிகுந்த சிரமத்திற் குள்ளாகின்றனர்.

இந்த பாதையில் பணி உடனடியாக தொடங்கப் பட வேண்டும் என்று நான் நாடாளுமன்ற உறுப்பின ராக பொறுப்பேற்றவுட னேயே ரயில்வே அமைச்ச கத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

அதற்கு ரயில்வே இணையமைச்சர் முனி யப்பா அவர்கள் 22.9.2009ல் எழுதிய எழுத்துப்பூர்வ மான பதிலில் திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதைக்கு தேவை யான ரூ. 533 கோடி தொகையை ஒதுக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முன் னுரிமை அடிப்படையில் முயன்றுவருகிறது. விரை வில் இந்த திட்டம் நிறை வேற்றப்படும் என்று கூறியிருந்தார்.

இப்படி பதில்தந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் எவ்வளவு காலம் தாமதிக்கப்போகிறீர்கள்.

சென்னையிலிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லக்கூடிய வழித்தடங் களில் மயிலாடுதுறை-காரைக்குடி வழித்தடமே விடுபட்டுள்ளது. எனவே, விரைவாக நடவடிக்கை எடுத்து எஞ்சியிருக்கக் கூடிய திருவாரூரிலிருந்து காரைக்குடி வரையிலான 150கீ.மீ. தூர அகல ரயில் பாதை வேலையை முடித் துத் தரவேண்டுகிறேன்.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., குறிப்பிட் டார்.

ரயில்வே இணையமைச்சர் பதில்

இதற்கு பதிலளித்த ரயில்வே முனியப்பா பதிலளித்து பேசியதாவது:

உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சுட்டிக்காட்டிய இந்த ரயில்பாதை மிக முக்கியமான ஒன்று. இதை உடனடியாக தீவிர பரிசீல னைக்கு எடுத்து விரைவாக நிறைவேற்றித்தர ஆவணம் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Photobucket