வெள்ளிவிழா கண்ட துபை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி லால்பேட்டை ரூம் மேல் மாடியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்.ஏ.முஹம்மது சையது தலமை வகித்தார்.
துபை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஆர்.பி.அப்துல் ஃபத்தாஹ்,செயலாளர் ஓ.ஆர்.தாஹிர் உசேன்,பொருளாளர் பி.எம்.ஃபைஜல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மெளலவி ஹாபிள் அபுல் கலாம் ஆஜாத் கிராஅத் ஓதினார்.
எஸ்.எம்.அப்துல் வாஜிது வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினரும்,காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாருமான எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் காரி ஆர்.இஸட்.முஹம்மது அஹமது ஹஜ்ரத்,துபை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ.லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் லால்பேட்டையின் அனைத்து உறுப்பினர்கள்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.தனது உரையில்:லால்பேட்டை மாநகரின் பாரம்பரிய பெருமையை சுட்டிக்காட்டி,தனக்கும் லால்பேட்டை நகருக்கும் இருந்து வரும் நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த அவர்,சமுதாய சகோதரர்கள் இயக்க வேறுபாடுகளை புறம்தள்ளி,குடுமப உறுப்பினர்கள் உற்றார் உறவினர்களை அரவணைத்து வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
டெல்லியில் இருந்து புறப்பட்டு துபை விமான நிலையத்தை அடைந்ததும் நேராக லால்பேட்டை துபை ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட,அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் உரை அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு லால்பேட்டை துபை ஜமாஅத்தின் தலைவர் அப்துல் ஃபத்தாஹ்,செயலாளர் ஓ.ஆர்.தாஹிர் உசேன்,ஏ.எம்.ஜெகரிய்யா ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் தலைவர் மெளலவி அமீனுல் ஹுஸைன்,பொதுச் செயலாளர் யாசிர் அரஃபாத் அலி,பொருளாளர் இலியாஸ்,சுஐபுத்தீன்,உள்ளிட்ட நிர்வாகிகள்,மற்றும்அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா,அபுதாபி மண்டலச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,காயல் யஹ்யா முஹையத்தீன்,உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பிரதிநிதிகளும் திரளாக பங்கேற்றனர்.
ஏ.எம்.ஜெகரிய்யா நன்றி கூற காரி ஹஜ்ரத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
No comments:
Post a Comment