Friday, June 24, 2011

உள்ளாட்சித் தேர்தல் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் குழுவினர் சுற்றுப்பயணம் எச். அப்துல் பாசித் அறிக்கை

திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு எடுத்த முடிவின்படி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய இ.யூ. முஸ்லிம் லீக் குழுவினர் சுற்றுப் பயணம் செல்கின்றனர்.



இந்த சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்க ளுக்கான ஆய்வு எதிர்வரும் 26-6-2011 அன்று சென்னை ராமாவரத்தில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இச் சுற்றுப்பயணம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டி தகவல் தெரிவிக்கப்படும்.

எனவே, மாவட்ட தலைவர், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி, ஒன்றிய, வார்டுகளின் விவரம், வெற்றி வாய்ப்புகள், வேட்பாளர்கள் போன்ற விவரங்களை திரட்டி வைத்திருக்குமாறு

குழுவின் அமைப் பாளர் எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.) கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket