Tuesday, June 21, 2011

பொதுமக்கள் குறைதீர்க்க ரூ.25லட்சத்தில் காயிதெ மில்லத் நினைவு கட்டிடம் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., திறந்து வைத்தார்


வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலு வலக வளாகத்தில் பொது மக்கள் குறை தீர்க்க ரூ.25 லட்சத்தில் கட்டப்பட் டுள்ள காயிதெ மில்லத் நினைவு கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நாகராஜன் தலைமையில் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவல கத்தில் பொது மக்கள் குறை தீர்க்க கட்டிடம் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.25 லட்சத்தை எம். அப்துர் ரஹ்மான் ஒதுக்கினார்.

இந்த நிதியில் கட்டப் பட்ட கட்டிடத்திற்கு கண் ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பெயர் சூட்டப்பட் டது. கட்டி முடிக்கப்பட்ட இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. திறந்து வைத்தார்.

இவ் விழாவில் மாநக ராட்சி மேயர் கார்த்தி கேயன், ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் அருள்ஜோதி அரசன், துணை மேயர் முஹம்மது சாதிக், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் முஹம் மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம்மது ஹனீப், செயலாளர் ஜான் பாட்சா, நகரத் தலைவர் அய்யூப் பாஷா எம்.சி. நகர துணைச் செயலாளர் ஜமீர், சத்து வாச்சேரி நகர தலைவர் சிராஜுத்தீன் மற்றும் மாநக ராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மக்கள் தொடர்பு அலுவ லர் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Photobucket