Saturday, January 11, 2014

உலமாக்களின் ஆதரவு சமுதாயப் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்குத்தான்..! அமீரக காயிதெமில்லத் பேரவை நடத்திய மீலாது விழாவில் சேலம் மெலளவி அபூதாஹிர் பாகவி முழக்கம்!


அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் மெளலிது மற்றும் மீலாது விழா நிகழ்ச்சி 10/01/2014 வெள்ளிக் கிழமை பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.எ.எஸ்.முஹம்மது அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.


மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.எஸ்.முஹம்மது அன்சாரி வரவேற்றுப் பேசினார். அபுதாபி மெளலவி காயல் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி துவக்கவுரை நிகழ்த்தினார்.



தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி எம்.அபூதாஹிர் பாகவி,லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி முஹம்மது காஸிம் பாஜில் மன்பஈ ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.


நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய பேரவையின் பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான் தனது உரையில்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு மூன்று முக்கிய கொள்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது அவைகள் 1,மஹல்லா ஜமாஅத் வலிமையை பேணிப் பாதுகாப்பது.
2,மார்க்க விஷயத்தில் ஜமாஅத்துல் உலமா சபையும் உலமாக்களும் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வது. 
3,அரசியல் விவகாரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடுகளை சமுதாயம் ஆதரித்து ஏற்றுக் கொள்வது.

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய சில உலமாகள், சுன்னத் வல் ஜமாஅத் கோட்பாட்டிற்கு எதிரானவர்களோடு கைகோர்த்து வலம் வருவதை வேதனையோடு சுட்டிக் காட்டிய அவர் வரும் காலங்களில் இது போன்ற நிலைகளை அந்த ஒரு சில ஆலிகளும் எடுக்க ஒட்டு மொத்த உலமாக்களும் இடம் அளிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.  

 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மெளலவி அபூதாஹிர் பாகவி தனது உரையில்: 
தமிழகத்தை பொறுத்தவரை 90 சதவீத உலமாக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பக்கம்தான் இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்ககளுக்கு எதிரானவர்களோடு கை கோர்ப்பவர்களை பொருட்படுத்த வெண்டிய அவசியமில்லை என்பதை தெளிவு படுத்தினார். பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வியல் வரலாற்றை சுருக்கமக விளக்கி சமுதாயம் அதை பேணி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.




மெளலவி முஹம்மது முஹம்மது காஸிம் ஹஜ்ரத் தனது உரையில்:
மீலாது விழாக்கள் கொண்டாடுவதன் மூலம் பெருமானர் (ஸல்) அவர்களின் அந்தஸ்து உயர்ந்து விடாது மாறாக நமது அந்தஸ்தும்,அவர்களைப்பற்றிய வாழ்க்கை நெறிகளை மக்களுக்கு எடுத்து சொல்வதினால் நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசினார். 

 நிகழ்ச்சியை அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.



 
நிகழ்ச்சியில் தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்,அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,அய்மான் மற்றும் ஐ.எம்.எஃப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தலைமை நிலையப் பேச்சாளர் லால்பேட்டை யு.சல்மான் பாரீஸ் நன்றி கூனார். மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சி முடிந்தவுடன் பங்கேற்ற அனைவருக்கும் ஆவை.அன்சாரி இல்லத்தில் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment

Photobucket