Saturday, March 16, 2013

துபையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் நிறுவன நாள் கருத்தரங்கம்

துபை சோனாப்பூர் கிளை சார்பில் எழுச்சியுடன் நடைப்பெற்ற   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின விழா மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்க கருத்தரங்கம்!

துபை : அமீரக காயிதெமில்லத் பேரவை துபை சோனாப்பூர் கிளை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின விழா மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்க கருத்தரங்கம் சோனாப்பூர் பகுதி செயலாளர் ரஹமத்துல்லாஹ் தலைமையில் 14.03.2013 வியாழக்கிழமை மாலை சோனாப்பூர் பவர் குரூப் கேம்பில் நடைபெற்றது. 





விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத் அலி முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிக்ழச்சியின் துவக்கமாக இம்ரான் கான் இறைமறை வசனங்கள் ஓதினார்.
முகவை கலீம் வரவேற்புரையாற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவை துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப், அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ், துபை மண்டலச் செயலாளர் முதுவை.ஹிதாயத், அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத், ஷார்ஜா மண்டலச் செயலாளர் தஞ்சை பாட்ஷா கனி,ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீழை ஹமீது யாசின்,துபை தேரா பகுதிக்கு காயிதெமில்லத் பேரவையின் மற்றொரு செயலாளராக அறிவிக்கப்பட்ட நெல்லை ஷேக் சிந்தா,முகவை ஜவ்வாது ஆகியோர் முஸ்லிம் லீகை வலிமைப் படுத்துவதன் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினர்.






தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகள், இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இட ஒதுக்கீடு,மது விலக்கு, மற்றும் சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருக்கும் பேரணியில் தாயகத்தில் இருக்கும் நமது சமுதாய மக்களையும் நமது உறவினர்களையும் பங்கெடுக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி,பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் கிழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.







 நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் ஊடகத் துறைச் செயலாளர் கும்பகோணம் சாதிக்,தேரா பகுதி செயலாளர் வி.களத்தூர் ஷாஹுல் ஹமீத்,உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் சோனாப்பூர் பகுதி சமுதாய இளவகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இறுதியாக சோனாப்பூர் எம்.பி.எம்.கேம்ப் ஜுபைர் அலி நன்றி கூறினார்.

1 comment:

Photobucket