Wednesday, October 3, 2012

மணிச்சுடர் வெள்ளிவிழா - அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் அறிக்கை!


ல்லவனை வணங்கி வாழ்வோம் இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம் எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் என்கிற அறிவார்ந்த உபதேசத்தை சமுதாயத்திற்கு வழங்கிச்சென்ற மணிச்சுடர் தந்த மாமேதை சிராஜுல் மில்லத் அவர்களின் பிறந்த தினத்தில் நடைபெறும் மணிச்சுடர் வெள்ளி விழா தமிழக தலை நகர் சென்னையில் நாளைய தினம் நிகழ இருக்கும் தகவலை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.


இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நமது பேரவையின் சார்பில் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி சாஹிப் அவர்கள் சென்றுள்ளார்கள்.
மணிச்சுடரின் வெள்ளிவிழா சிறக்க  அதன் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்து நிற்கும் அமீரக காயிதேமில்லத் பேரவை நெஞ்சார வாழ்த்துகிறது அல்ஹம்துலில்லாஹ்..!

அமீரக காயிதேமில்லத் பேரவை மிகப்பெரிய அளவில் வளர்ந்து,சமுதாயத்திற்கு சேவை செய்திட வேண்டும் என்ற சிராஜுல் மில்லத் அவர்களின் கனவு மெய்ப்பாடவும்,முனீருல் மில்லத் அவர்களின் தலைமையில் வலுவான சமுதாயம் காணவும் நமது செயல் திட்டங்களை வகுத்து,எதிர்கால திட்டங்களை முன்னெடுக்கும் பணிகளை   
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று நமது உணர்வுகளை நாட்டுக்கு உணர்த்திய அருந்தலைவரின் பிறந்த நாளில் அவர் துவக்கி வைத்த அமீரக காயிதேமில்லத் பேரவையை மேலும் விரிவு படுத்தி தொண்டாற்றிட உறுதி ஏற்போம். 
வஸ்ஸலாம்.

ஏ.முஹம்மது தாஹா,
பொதுச்செயலாளர்-அமீரக காயிதேமில்லத் பேரவை.

No comments:

Post a Comment

Photobucket