Saturday, March 17, 2012

புதிய பரிணாமத்தை பொருளாதாரத் துறையில் காண இந்திய அரசு இந்த எனது வேண்டு கோளை பரிசீலிக்க வேண்டும் !

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைத்துள்ளபடி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. நாடாளுமன்றத்தில் கோரிக்கை 


முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார துறை களில் மிக மிக பின்தங்கியிருப் பதால் ரங்கநாத் மிஸ்ரா பரிந் துரையின் அடிப்படையில் குறைந்த பட்சம் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. நாடாளுமன்றத் தில் கோரிக்கை விடுத்துள்ளார். 



ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்துக்கான விவாதத்தில் பங்கேற்று வேலூர் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பேசிய தாவது-


உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்களை சந்தித்து திணறிய போது, சென்ற ஆண்டு நமது நாடு 8.4 சதவிகித பொருளாதார வளர்ச் சியை கண்டது மிக மிக பாராட் டுக்குரியது.


ஆனாலும் பெருகி வரும் மக்கள் தொகையின் அபரிமித மான வேகத்தில் நாடு பல்வேறு துறைகளிலும் ஏராளமான சவால்களை எதிர்நோக்கியுள் ளதையும் மறுக்க இயலாது. மிக முக்கியமாக நாட்டில் ஏழ்மையும், கல்வியற்ற நிலையையும் அறவே இல்லாமல் ஆக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம்முடைய அரசுக்கு இருக் கிறது. அத்தகைய திறனும், தகுதியும் நமது அரசக்கு இருப்பதால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உண்டு.


சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு


மேதகு குடியரசுத் தலைவர் தமது உரையில், சிறுபான்மை யினருக்கு 4.5 சதவிகிதம் பிற்பட்ட வகுப்பினருக்குரிய 27 சதவிகித ஒதுக்கீட்டில் உள்ஒ துக்கீடாக வழங்கப்பட்டுள் ளதை குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பாரசீகர் கள் என்று எல்லோருக்குமான இந்த உள்ஒதுக்கீடு என்பது மிக மிக குறைவு. பொருந்தாத ஒன்று. என்றாலும், முதன் முதலாக இடஒதுக்கீடு என்ற அளவில் இந்த அரசு அறிவிப்பு செய்துள்ளது பாராட்டுக்குரி யது.


இந்த மிகக் குறைந்தபட்ச ஒதுக்கீடு பெருங்கடலில் விழுந்த சில நீர்ச்சொட்டுகளை போன்றது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கென்று தனியே ஒதுக்கிடு தரப்பட வேண்டும். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக் கென பிரத்தியேகமாக டாக்டர் கலைஞர் அரசு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதுபாராட்டுக்குரிய முன்னுதா


ணம். அதனை அதிகப்படுத்தி 7 சதவிகிதமாக தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போதும், அதனை ஏற்று பரிந்துரை வழங்க ஒரு ஆய்வுக்குழுவை அமைத்திட உறுதியளித்தார். இது ஒரு நல்ல முன்உதாரணம்.


சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் அடித்தள நிலையை உணர்ந்து பல கட்டங்களில் ஆய்வு செய்வதற் கான பல கமிஷன்களை மத்திய அரசு அமைத்தாலும் பலன் இல்லாமல் போவதுதான் வேத னைக்குரியதாக இருக்கிறது.


1984-ல் கோபால் சிங் குழு 2005-க்குப் பிறகு நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு போன்ற கமிஷன்களை போட்டு உண்மை நிலையை கண்டறிந்த பின் னரும், இந்த கமிஷன்களின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக் கிறது. அப்படியானால் ஏன்தான் இதுபோன்ற ஆய்வுக்குழுக் களை நியமிக்க வேண்டும்? அதனால் என்ன பயன்? என்று நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.


முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு துறைகளில் மிக மிக பின் தங்கியிருப்பதால் குறைந்த பட்சம் 10 சதவீத இட ஒதுக்கீட முஸ்லிம்களுக் கென்று பிரத்தி யேகமாக வழங்கப்பட வேண் டும்.


பாலஸ்தீனத்துக்கு ஆதரவு இஸ்ரேலோடு நெருக்கம்


பாலஸ்தீனர்களின் உணர்வு மற்றும் உரிமை போராட்டத்தில் அவர்கள் சந்தித்து வரும் சோதனைகள் ஏராளம். இந் நிலையில் பாலஸ்தீனர்களின் நிரந்தர தீர்வு என்பது உலக அரங்கில் அடிக்கடி பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். இந்த பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக எப்போதும் பக்கபலமாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து அறிவிப்புச் செய்து கொண்டே இருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் அவர்களுக்கு நேரடியான அச்சுறுத்தும் நாடாக விளங்கும் இஸ்ரேலையும் தோழமையோடு நெருக்கம் வைத்து கொண்டிருப்பது எதிரும் புதிரும் உடையதாக உள்ளது.


இந்தியாவுக்கு ஏன் இந்த முரண்பாடான நிலைபாடு? இஸ்ரேலின் வற்புறுத்தலுக்கு இணங்குவதால்தான் அண்மையில் இஸ்ரேலைப் பற்றிய கருத்துக்களை எழுதிய ஒரு பத்திரிக்கை ஆசிரியரை டெல்லி போலீஸ் எந்த காரணத்தையும் முறையாக வெளியிடாமல் கைது செய்தது. ஒருபுறம் இந்தியாவின் இந்த செயல் பத்திரிக்கை சுதந்தி ரத்திற்கு ஒரு கேள்விக் குறியாக எழுந்திருக்கிறது. இந்தியா இதிலிருந்து மீண்டு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையைக் கொண் டிருக்கிறது.


வட்டியில்லா வங்கி முறை:


இந்தியாவில் பொருளாதார சுரண்டலுக்கு மிக முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது வட்டிதான். மனிதனை வட்டி எல்லா நிலைகளிலும் பின் னோக்கியே இழுத்துச் செல்கி றது.


வளைகுடா நாடுகளில் வட்டியில்லா வங்கி முறையை நடைமுறைப்படுத்தி மிகப் பெரிய அளவில் செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறியுள்ளன. இதனையுணர்ந்து மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இப் போது வட்டியில்லா இஸ்லாமிய வங்கிமுறையை அமுல் படுத்தி வழக்கத்தில் இருக்கும் வங்கி முறையைவிட அதிக அளவில் இலாபம் ஈட்டுகின்றன. இந்த வாங்கி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய பரிணாமத்தை பொருளாதாரத் துறையில் காண முடியும் என்பதால் இந்திய அரசு இந்த எனது வேண்டு கோளை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Photobucket