அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் மெளலிது ஷரீப் நிகழ்ச்சி மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்,ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில்
புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் வழங்கினார். நிகழ்ச்சியில் திரளான பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூறினார்.மெளலவி ரஷீத் அஹமது ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.--
No comments:
Post a Comment