ஆட்சித் தலைநகரிலும், ஆர்.எஸ்.எஸ். தலைநகரிலும் பட்டொளி வீசிக் பறக்குது பச்சிளம் பிறைக்கொடி மார்ச் 10-ல் நாடெங்கும் அதை ஏற்றி மகிழ்வோம் `நாக்பூர்’ மகாராஷ்டிர மாநிலத்தின் மாநகராட்சி இது.1925 செப்டம்பர் 27-ம் தேதி இந்த நாக்பூரில் உள்ள டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் வீட்டில்தான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைக்கப்பட்டது.
டாக்டர் சாவர்க்கர், டாக்டர் எல்.வி. பரஞ்பே, டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, டாக்டர் தோல்கர் ஆகியோரின் ஒத்து ழைப்போடு ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக் கிய காலம் முதல் இன்று வரையிலும் அதன் தலைமைய கம் (சர்சங்கசாலக்) நாக்பூரிலேயே செயல்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைநகரான அந்த நாக்பூரில்தான் இன்று பச்சிளம் பிறைக்கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.
ஆம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.
இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தனித்து தனிச் சின்னத்தில் போட்டியிட்டது. மும்பை, நாக்பூர், அமராவதி, நாசிக், அக்கோலா உள்ளிட்டஇடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டனர்.
இத்தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 17-ம் தேதி அறிவிக்கப்பட்டன. நாக்பூர், அமராவதி மாநகராட்சிகளில் தலா இரண்டு இடங்களில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் வெற்றி வாகை சூடியது.
நாக்பூர் மாநகராட்சியின் தோகா பகுதி 4பி வார்டில் அஸ்லம் கான் (முல்லா) ரஷீத்கான், 4ஏ வார்டில் ஜனாபா இஷ்ரத் நாஹித் கவுஸர் ஜலீல் அன்சாரி ஆகியோரும்,
அமராவதி மாநகராட்சியின் 8-வது வார்டில் இம்ரான் அஷ்ரபி 27-வது வார்டில் ரஹீமா பேகம் ஆகியோரும் இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் கவுன்சிலர்களாக சாதனை படைத்துள் ளனர்.
மும்பை மாநகராட்சியில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் 7 இடங்களில் போட்டியிட்டு அதில் 4 இடங்களில் 2வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எச்.அப்துல் பாஸித் (முன்னாள் எம்.எல்.ஏ.,) உள்ளிட்டோர் பரப்புரை செய்தபோது அவர்கள் உரை கேட்க ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டனர். வாக்கு கேட்டு வீதிவீதி யாக சென்ற போது அவர்கள் பின் சென்ற கூட்டம் பேரணியாகத் தெரிந்தது.
வடஇந்தியாவில் இந்திய யூனியன்முஸ்லிம் லீகோடு தேர்தல் உறவு கொள்ள அரசியல் கட்சிகள் தயங்கிய போது- தாய்ச்சபையை நாங்கள் தாங்கிப் பிடிப்போம் என சமுதாயம் தயாராகி விட்டது.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்திய யூனியன் முஸ் லிம் லீகை போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்ற கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் வாக்கை சமுதாயம் இன்று நினைத்துப் பார்க்க தொடங்கி விட்டது.
1906 டிசம்பர் 31-ல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீகின் வரலாறு 1947 ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை யோடு முற்றுப் பெற்று விட்டது என நினைத்தவர்களின் எண்ணங்களை தகர்த்தெறிந்தார் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்.
முஸ்லிம் லீக் இனி எதற்கு என தேசியவாதம் பேசிய வர்கள் முகவரியைத் தொலைத்தனர். முஸ்லிம் லீகில் முழு நேரம் உழைத்தவர்கள்கூட நாட்டுப் பிரிவினைக் குப்பின் நாடு துறந்து தங்களையும் மறந்தனர். ‘முஸ்லிம் லீகா’ அதை இனி செயல்பட அனுமதிக்க மாட்டோம் என கொக்கரித்தவர்கள் கொட்டம் அடங்கிப் போனார்கள்.
1947 டிசம்பர் 13-14-ல் பாகிஸ்தானின் கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சில் கடைசிக் கூட்டத்திற்கு சென்றவர்கள் அதற்கு முடிவுரை எழுதுவார்கள் அல்லது அங்கேயே தங்கி விடுவார்கள் என நினைத்தவர்கள் உண்டு.
அத்தனைக்கும் விடை தந்த அற்புத நாள் 1948 மார்ச் 10.
ஆம்! அந்த நாளில்தான் இந்திய முஸ்லிம்களுக்கே நம்பிக்கை ஒளி பிறந்தது. சென்னை அரசினர் தோட்டத் திலுள்ள ராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் உதயமானது.
அதில் நம்பிக்கை கொண்டு பின் தொடர்ந்தவர் களுக்கு `கேரளா’ சாட்சியமளித்தது. தமிழகம் தன்னம் பிக்கை கொண்டது.
பச்சிளம் பிறைக்கொடி பறந்தால் தங்களுக்கு பாதிப்பு வருமோ என பயந்த வடஇந்தியர் முஸ்லிம்களால் எந்த பலனையும் பெற முடியவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது அவர்களை தேசியத் தலைவராக வும், மானமிகு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை தேசிய செயலாளராகவும் கொண்டு இயங் கத் தொடங்கிய இக்காலகட்டத்தில்தான் 100 வருடங் களில் கிடைக்காத நன்மைகள் எல்லாம் இந்திய முஸ்லிம்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
சச்சார் கமிஷனும், மிஸ்ரா கமிஷனும், சிறுபான்மை நலத் துறையும், ஆஸாத் பவுண்டேஷனும், உர்தூ வளர்ச்சி யும் இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் சாதனைகள் என்பதை சமுதாயம் மறந்து விடக்கூடாது.
மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பதிலும், பள்ளிவாசல் பெருமையை நிலைநாட்டுவதிலும், தீவிர வாத சிந்தனைக்கே சென்று விடாமல் இளைய சமுதா யத்தை வழிநடத்துவதிலும், இந்திய யூனியன்முஸ்லிம் லீக் ஆற்றிய பங்கு பணிக்காகவே இந்த இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய கடமை முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு.
அதனால்தான் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் பள்ளிவாசல்கள் திறப்பு விழாக்களிலே பகிரங்கமாக அறி விக்கிறார்கள். - ``இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைமையின் கீழ் தமிழகம் அணிவகுக்க வேண்டுமென்று!’’
இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அதிசயங்களைப் பாருங்கள்.
இந்தியத் தலைநகரில் இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் கோலோச்சுகிறார். சர்வதேச பிரச்சினைகளில் இந்தியக் குரலாக அவர் ஒலிக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தலைநகரில் பச்சிளம் பிறைக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. இதைக் கண்டு சிலரால் பொறுக்க முடியவில்லை.
ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.
``இந்திய யூனியன்முஸ்லிம் லீகுடன் உறவு கொள்ள பா.ஜ.க. தலைவர் நிதின்கட்காரி ஆசைப் படுகிறார்; பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முஸ்லிம் லீகை பாராட்டு கின்றனர்; முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக திருப்ப முஸ்லிம் லீகுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க. துடிக்கிறது’’ என்றெல்லாம் அவைகளில் எழுதப்பட்டுள்ளன என்றால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் பா.ஜ.க.வினர் தான் - முஸ்லிம் லீகர்கள் அல்லர்.
எல்.கே. அத்வானி பாகிஸ்தான் சென்றார் - காயிதெ ஆஸம் முஹம்மதலி ஜின்னாஹ் சாஹிப் நினைவிடத்தில் நின்று கொண்டு அவரை போற்றிப் புகழ்ந்ததும் -
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி பேசியதும் முஹம்மதலி ஜின்னா சாஹிபை புகழ்ந்ததும் பா.ஜ.க.வில் தான் புயலையும், பூகம்பத்தையும் ஏற்படுத்தியதே தவிர முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த விளைவையும் ஏற்படுத்த வில்லை.
எனவே, விமர்சனங்களைப் பற்றி நாம் கவலைப்பட போவதில்லை - நம் சமுதாயத்தின் எதிர்கால நலனை பற்றியே அக்கறை கொள்வோம்.
தேசிய ஒருமைப்பாடு - சமய நல்லிணக்கம் - முஸ்லிம் களின் தனித்தன்மையை காத்தல் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியத்தை எங்கெங்கும் பறைசாற்று வோம்.
ஆர்.எஸ்.எஸ். தலைநகரில் மட்டுமல்ல-இந்திய ஆட்சித் தலைநகர் புதுடெல்லியிலிருந்து இப்போது வந்துள்ள செய்தி. வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மகுடம் சூட்டியுள்ளது.
ஆம்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, ``ஏணி’’ சின்னத்தையும் வழங்கியுள்ளது.
தாதா, பாவா, வாரிசுகள் என உரிமை கொண்டாடி குழப்பம் விளைவித்து வந்த தாவூது மியாகான், பாத்திமா முஸப்பர் (பஷீர் அஹ்மது கான்) ``தனி நபர்கள்’’ இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர் கூட இல்லாத இவர்கள் இக்கட்சி பற்றி பேச அருகதையற்றவர்கள் என தேர்தல் ஆணையம் தனது நெத்தியடி உத்தரவில் தெளிவுபடுத்தி விட்டது.
இந்த உத்தரவு கிடைத்தவுடன் தலைநகர் புதுடெல்லியில் தேசியத் தலைவர் மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது சாஹிப் மார்ச் 4-ம் தேதியும், தமிழகத் தலைநகர் சென்னையில் தேசியப் பொதுச் செயலாளர் அன்புத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மார்ச் 6-ம் தேதியும் செய்தியாளர் கூட்டத்தில் இதுபற்றி விளக்கி, மார்ச் 10-ம் தேதியை வெற்றி விழாவாக கொண்டாடுவோம் என அறிவித்துள்ளனர்.
65 ஆண்டு காலத்தில் கிடைக்காத ஒரு அங்கீகாரம் இன்று கிடைத்துள்ளது என்றால் இந்த நாளை நாம் கொண்டாடுவது கடமையல்லவா!
எனவே, 2012 மார்ச் 10 சனிக்கிழமை ஊர்கள்தோறும் விழா எடுப்போம்; பச்சிளம் பிறைக்கொடி ஏற்றி மகிழ்வோம்; இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் வரலாற்று சாதனைகளை பதிய வைப்போம்! அதன் பெருமைகளை மஹல்லாக்கள் தோறும் முழங்கச் செய்வோம்!
நமது வெற்றி முழக்கங்கள் வெடிக்கும் பட்டாசுகள் அல்ல; ‘‘நாரே தக்பீர்! அல்லாஹு அக்பர்! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!’’ முழக்கங்கள்தான். அதை உரத்து முழங்கு வோம்! அர்ஷில் எதிரொலிக்கும் அந்த முழக்கம் அல்லாஹ்வின் பேரருளை நமக்கு நிச்சயம் பெற்றுத் தரும்.
- காயல் மகபூப்
No comments:
Post a Comment