அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயிலுக்கு
அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவையின் துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி தலைமை வகித்தார்.பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் வரவேற்றுப் பேசினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர்,தாய்ச் சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்,சமுதாய ஆர்வலர் விருத்தாச்சலம் ஷாஹுல் ஹமீத்,ஊடகத்துறை செயலாளர் கும்பகோணம் சாதிக் ஆகியோர் சிறப்பு விருந்தினரை வரவேற்றும்,பதிப்பக அற்க்கட்டளையின் சமுதாயப் பணிகளையும் விவரித்துப் பேசினர்.
சமுதாயப் பிரமுகர் கே.ஏ.முஹம்மது அலி மில்லத் இஸ்மாயிலுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.இறுதியாக பேசிய மில்லத் இஸ்மாயில் பதிப்பக அறக்கட்டளையின் தன்னலமற்ற பணிகளை விவரித்து தனக்கு அளிக்கப்பட இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்தோடு தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பணிகளில் மேலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமூட்டுவதாக தெரிவித்தார்.இறுதியாக பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூறினார்.துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
No comments:
Post a Comment