அன்புடையீர்!அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்ம..
இந்திய முஸ்லிம்களின் தாய்ச் சபை என அனைவராலும் போற்றப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பேரமைப்பான அமீரக காயிதெமில்லத் பேரவை கடந்த பல ஆண்டுகளாக அயல் நாட்டில் வாழும் இந்திய மக்களுக்கான சமுதாயப் பணியில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறது அல்ஹம்துலில்லாஹ்!
இதன் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 15-12-2011 வியாழன் மாலையில் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் அபுதாபியில் நடைபெற உள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் சூழலில் இன்றைய அனைவரின் அரசியல் பணிக்கும் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும் தான் எந்த பிரதிபலனும் பார்க்காமல் பாடுபடும் இயக்கம் என தேர்வு செய்து பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இதன் தாக்கம் அமீரகத்திலும் எதிரொலிப்பதை காணும் இன்றைய சூழலில் நமது பேரவையின் பொதுக்குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி அனைவரும் பங்கேற்று தங்கள் பகுதியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும்,எதிர்காலப் பணிகளுக்கு ஆலோசனைகள் கூறவும் அனைவரும் தவறாது வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்:- 15-12-2011 வியாழன் மாலை 7 மணி அளவில்இடம்:- ஏர் லைன்ஸ் ரெஸ்டாரண்ட் பென்குயிண்ட் அரங்கம்.
நஜ்தா ரோடு-அபுதாபி.
தங்கள் அன்புள்ள,
ஏ.முஹம்மது தாஹா
(பொதுச் செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை)
வருகை குறித்த தகவலுக்கு..
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்-0502821852
(அபுதாபி மண்டலச் செயலாளர்)
முதுவை ஹிதாயத்-0509196977
(ஊடகத் துறைச் செயலாளர்)
No comments:
Post a Comment