ஐக்கிய அரபு அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுச் செயலாளரும்,துபை ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளரும்,சிறந்த சமூக சேவகருமான ஏ.முஹம்மது தாஹாவின் தகப்பனார் பி.அபூபக்கர் இன்று தன்ஞை மாவட்டம் திருப்பனந்தாளில் காலமானார். அன்னாருக்கு வயது 76.அவருக்கு மனைவியும்,மூன்று புதல்வர்களும்,2புதல்விகளும் உள்ளனர். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்குப் பின் திருப்பனந்தாளில் நல்லடக்கம் செய்யப்பட்டது.செய்தியறிந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்,மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.,மாநிலச் செயலாளர் காயல் மஹபூப் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஏ.முஹம்மது தாஹாவை தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு மஃபிரத்துக்கு துஆ செய்தனர்.அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏ.முஹம்மது தாஹாவை சந்தித்து ஆறுதல் கூறி மஃபிரத்துக்கு துஆ செய்தனர்.இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் துபை லூத்தா மஸ்ஜிதில்(குவைத் பள்ளியில்) அன்னாரின் மஃபிரத்திற்கு துஆவும்,ஜியாரத் நிகழ்ச்சியும் நடைபெறும்.இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அமீரக காயிதெமில்லத் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment