Saturday, January 11, 2014

உலமாக்களின் ஆதரவு சமுதாயப் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்குத்தான்..! அமீரக காயிதெமில்லத் பேரவை நடத்திய மீலாது விழாவில் சேலம் மெலளவி அபூதாஹிர் பாகவி முழக்கம்!


அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் மெளலிது மற்றும் மீலாது விழா நிகழ்ச்சி 10/01/2014 வெள்ளிக் கிழமை பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.எ.எஸ்.முஹம்மது அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.


மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.எஸ்.முஹம்மது அன்சாரி வரவேற்றுப் பேசினார். அபுதாபி மெளலவி காயல் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி துவக்கவுரை நிகழ்த்தினார்.



தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி எம்.அபூதாஹிர் பாகவி,லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி முஹம்மது காஸிம் பாஜில் மன்பஈ ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.


நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய பேரவையின் பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான் தனது உரையில்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு மூன்று முக்கிய கொள்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது அவைகள் 1,மஹல்லா ஜமாஅத் வலிமையை பேணிப் பாதுகாப்பது.
2,மார்க்க விஷயத்தில் ஜமாஅத்துல் உலமா சபையும் உலமாக்களும் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வது. 
3,அரசியல் விவகாரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடுகளை சமுதாயம் ஆதரித்து ஏற்றுக் கொள்வது.

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய சில உலமாகள், சுன்னத் வல் ஜமாஅத் கோட்பாட்டிற்கு எதிரானவர்களோடு கைகோர்த்து வலம் வருவதை வேதனையோடு சுட்டிக் காட்டிய அவர் வரும் காலங்களில் இது போன்ற நிலைகளை அந்த ஒரு சில ஆலிகளும் எடுக்க ஒட்டு மொத்த உலமாக்களும் இடம் அளிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.  

 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மெளலவி அபூதாஹிர் பாகவி தனது உரையில்: 
தமிழகத்தை பொறுத்தவரை 90 சதவீத உலமாக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பக்கம்தான் இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்ககளுக்கு எதிரானவர்களோடு கை கோர்ப்பவர்களை பொருட்படுத்த வெண்டிய அவசியமில்லை என்பதை தெளிவு படுத்தினார். பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வியல் வரலாற்றை சுருக்கமக விளக்கி சமுதாயம் அதை பேணி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.




மெளலவி முஹம்மது முஹம்மது காஸிம் ஹஜ்ரத் தனது உரையில்:
மீலாது விழாக்கள் கொண்டாடுவதன் மூலம் பெருமானர் (ஸல்) அவர்களின் அந்தஸ்து உயர்ந்து விடாது மாறாக நமது அந்தஸ்தும்,அவர்களைப்பற்றிய வாழ்க்கை நெறிகளை மக்களுக்கு எடுத்து சொல்வதினால் நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசினார். 

 நிகழ்ச்சியை அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.



 
நிகழ்ச்சியில் தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்,அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,அய்மான் மற்றும் ஐ.எம்.எஃப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தலைமை நிலையப் பேச்சாளர் லால்பேட்டை யு.சல்மான் பாரீஸ் நன்றி கூனார். மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சி முடிந்தவுடன் பங்கேற்ற அனைவருக்கும் ஆவை.அன்சாரி இல்லத்தில் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Sunday, September 22, 2013

சமுதாயத்தின் இஜ்ஜத்தை காப்பதில் முன்னிற்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. முழக்கம்!



அமீரக காயிதே மில்லத் பேரவை (QMF ) -  சார்பில் "இஸ்லாமிய திருமண சட்டம் மற்றும் எம்.எஸ்.எப் .(MSF ) மாநில மாநாடு விளக்க கருத்தரங்கம்" 19/09/2013 -அன்று அமீரகம் அபுதாபியில் ,அல் இபுராஹிம் ரெஸ்டாரெண்ட் கான்பரன்ஸ் ஹாலில் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .








மௌலவி ,ரசீத் அஹமது பாஜில்.மன்பஈ அவர்களின் கிராத்துடன் துவங்கிய கூட்டத்தில் அபுதாபி மண்டல செயலாளர் அதிரை .ஏ.சாகுல் ஹமீது வரவேற்புரை யாற்றினார் . திட்டச்சேரி ஜாபர் சாதிக் பைஜி துவக்கவுரையாற்றிய பின் ,தமிழ் சங்க நிர்வாகி அதிரை காதர் முஹைதீன் ,சென்னை காதர் மீரான் பைஜி,அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது , IMF தலைவர் அப்துல் காதர்,பாரதி நட்பு கூட்டமைபின் கலீல் ரஹ்மான், காயல் ஹுசைன் மக்கி ஆலிம் ,மௌலவி நூருல்லா பைஜி,அல்ஹாஜ் பனியாஸ் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் கருத்துரை வழங்கினர் .
கவியன்பன் கலாம் அவர் இயற்றிய கவிதையை வாசித்தார்.





கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா எம்.எஸ்.எப்.மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றிய  பின், துணைத்தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் ,துணைத்தலைவர்  வழக்கறிஞர் இஜாஜ் பெய்க், புரவலர் நோபிள் மெரைன் அல்ஹாஜ் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

மணிச்சுடர் நாளிதழ் சார்பில் வெளிவந்துள்ள 26 வது ஆண்டு மலர் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர்  அப்துல் ரஹ்மான் வெளியிட சமுதாயப்புரவலர் நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் பெற்றுக் கொண்டார்.இரண்டாவது மலரை குத்தாலம் லியாகத் அலி வெளியிட பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர் பெற்றுக் கொண்டார்.
காயிதேமில்லத் பேரவையில் தன்னை இணைத்துகொண்ட கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ்விற்கு பேரவை உறுப்பினர் அட்டையை அப்துல் ரஹ்மான் எம்.பி. வழங்கினார்.

தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் A.லியாகத் அலி, பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் S.முஹம்மது தாஹா , பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் , ஆகியோர் இன்றைய காலகட்டத்தில்  எம்.எஸ்.எப். மாநாட்டின் இன்றியமையாத நிலை குறித்தும் , தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்று வரும் இஸ்லாமிய சட்ட விளக்க கருத்தரங்குகளின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.



பின் காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம் .பி . அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார் .

அவர் தமது உரையில்:
25 ஆண்டுகளுக்கு மேலாக அமீரகத்தில் நான் பணியாற்றியுள்ளதால், உங்களின் மன ஓட்டங்களை,ஆவல்களை நான் மிக அறிந்தவனாக உங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கின்றேன் .தாயகத்திலே , பல சவால்களை எதிர் நோக்கி இக்கட்டான காலகட்டத்தில் நம் சமுதாயம் இருப்பதை ,நான் இந்தியா முழுவதும்  சென்று வருவதன் மூலம் அறிந்துகொண்டுள்ளேன் .

நம் சமுதாயத்தின் இஜ்ஜத்தை ,மானம் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் செய்யபடும் சதி வேலைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு இல்லாத சமுதாயமாக நம் சமுதாயம் இருப்பது மிக வேதனைக்குரிய விசயமாகும் .தமிழகத்தில் நம் சமுதாய மக்கள்  கிராமம் முதல்,பெரு நகரம் வரை "முஹல்லா ஜமாஅத்" கட்டுக் கட்டுக்கோப்புடன், நம் சமுதாய கலாச்சாரத்தை பேணி  வாழ்ந்து வந்தோம் .ஆனால் ,இன்றைய கால கட்டத்தில் பெருநகரம் முதல் குக்கிராமம் வரை ஜமாஅத் கட்டுக்கோப்புக்கு சவால்விடும் வகையில் போட்டி ஜமாத்துகள் உருவாக்கி ஒருவருக்கொருவர் எதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது மிக வேதனைக்குரிய விசயமாகும் .

ஜமாஅத் ஒற்றுமையை குலைப்பது ,மார்க்க விசயங்களில் ஒருவருக்கொருவர் பகிரங்கமாக போட்டி போட்டுக்கொண்டு சவால் விடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சண்டையிடுவதன் மூலம் நமக்கு வெளியில் உள்ள எதிரிகளுக்கு வேலையில்லாமல் ஆகிவிட்டது ;நம் சமுதாயத்தை பார்த்து பிறர் எள்ளி நகையாடும் நிலை உருவாகியுள்ளதை நாம் கண்கூடாக் கண்டுகொண்டுள்ளோம் .

முஹல்லா ஜமாஅத் ஒற்றுமையினை குலைப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் நம் சமுதாயம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நாடெங்கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எச்சரித்து வருகின்றது .

சமுதாயத்தின் இஜ்ஜத்தினை,கண்ணியத்தை காக்கும் பணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றுமே முன்னிற்கும் .சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களிடம் ஒரு சமயம் கேட்கபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ,சமுதாயத்தின் இஜ்ஜத்தினை மரியாதையை கெடுக்கும் வகையில் முஹல்லா ஜமாஅத் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகியோ ,உறுப்பினரோ ,அல்லது வேறு எவரோ செயல்பட்டாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு எதிராக செயல் படுவோரை அப்புறப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று பதிலுரைத்தார் .

அந்த அடிப்படையில் இங்கு வந்திருக்கும் அனைத்து ஊர் ஜமாஅத் பிரமுகர்களும் ,அவரவர் ஊர் முஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கு தங்களால் இயன்ற அளவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு , எதிர்வரும் அக்டோபர் -05 ஆம்நாள் சென்னை பெரியார் திடலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அணியான முஸ்லிம் மாணவர் பேரவையின் 2 - ஆவது மாநில மாநாட்டில் உங்கள் பகுதியின் மாணவர்களை ,இளைஞர்களை அதிகளவில் பங்கு பெறச்செய்யவேண்டும் . 

நம் சமுதாய மாணவர்கள் ,இளைஞர்கள் பாதுகாப்புடனும் , ஒழுக்கத்துடனும் ,கட்டுப்பாட்டுடனும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு வழிக்காட்டியாக அமையும் , அந்தவகையில் எதிர்கால நம் சமுதாய தலைமுறையினருக்கு பயனுள்ள வழியை நாம் காண்பித்த நன்மையை அடையும் வகையில் அந்த மாநாட்டிற்கு உங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு  செய்கிறேன் என்று பேசினார் .

அமீரக QMF அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூற அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர்  மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ துஆ -உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது .கூட்டத்தில் அமீரக QMF மக்கள்  தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசீன்,மேலாளர் ஜமால் முஹைதீன்,விழாக்குழு செயலாளர் எம்.எஸ்.எ .பரகத் அலி ,ஊடகத்துறை ஒருங்கிணைபாளர் ஹமீத் சமத் பத்தாஹ்,திருச்சி பைஜுர் ரஹ்மான்,தேரா செயலாளர் நெல்லை ஷேக் ஜிந்தா,தணிக்கையாளர்கள் கீழக்கரை ஹமீத் யூசுப் பக்ஸ்,காயல் எஹ்யா முஹையத்தீன்,அல் மனாக் அதிபர் லால்பேட்டை கே.ஏ.முஹம்மது அலி,இ டி ஏ எம்.பி..எம். பொது மேலாளர் மலுக் முஹம்மது,அய்மான் சங்க பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீன்,திருவாடுதுறை பைத்துல் மால் தலைவர் முத்து ராஜா,ஆடுதுறை அப்துல் காதர்,ஷபீர் அஹமத்,ஆவணியாபுரம் ஃபிரோஸ்,விருதாச்சலம் சாகுல் ஹமீத்,லால்பேட்டை நஜீர் அஹமது,முஹம்மது தய்யூப்,ரபி அஹமத்,நீடூர் முபாரக்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிக்சச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 
நிகழ்ச்சிகளை பேரவையின் அமைப்பு  செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

Monday, September 16, 2013

அமீரக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளராக கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ் நியமனம்

துபாய், செப்.16- கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஒருங் கிணைப்பாளராக அதன் தலை வர் குத்தாலம் லியாக்கத் அலி அவர்களால் நியமிக்கப்பட் டுள்ளதாக பொதுச் செயலா ளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அறிவித் துள்ளார்.



கீழக்கரை நடுத் தெருவைச் சேர்ந்தவர் ஹமீத் சமத் ஃபத்தாஹ். 30 வயதாகும் இவர் துபையில் மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கீழக்கரையின் முது பெரும் முஸ்லிம் லீகர்களும், முன்னாள் தலைவர்களுமான மர்ஹூம் (இன்சூரன்ஸ்) ஷாஹூல் ஹமீத் அவர்கள், மற்றும் ஹஸன் அப்துல் காதர் ஆகியோரின் பேரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறை, மற்றும் சமூக வலை தளங்களில் மிகப் பெரும் ஆர்வமும், அறிவாற் றலும் கொண்டவர். பிளாக் ஸ்பாட் மற்றும் இணைய தளங்களை உருவாக்கி நடத்தி வருகிறார். கீழக்கரையின் முன்னணி இணைய தளங் களில் ஒன்றான கீழக்கரை டாட் காம் என்ற இணைய தளத்தின் ஆசிரியருமாவார். கீழக்கரை சம்பந்தமான அனைத்து இணைய தளங்களையும் ஒரே அப்ளிகேஷனில் ஐ போன், ஐ பேட் களில் காணும் புதுமையை முதலில் புகுத்தியவர்.

இவரை, பேரவை ஊடகத் துறை செயலாளர் சாதிக் அவர் களுடன் இணைந்து பணியாற்ற, ஊடகத் துறை ஒருங்கிணைப் பாளராக அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, நியமித்திருப்பதாக அதன் பொதுச் செயலாளர் திருப் பனந்தாள் முஹம்மது தாஹா அறிவிப்பு வெளியிட்டுள்ள னர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் மற்றும் சர்வ தேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப் பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துள் ளனர்.

அமீரக காயிதே மில்லத் பேரவை அவர் வருகைக்கு வாழ்த்துக்களையும், வரவேற் பினையினையும் தெரிவித்துக் கொண்டிருப்பதாக அதன் பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீ துர் ரஹ்மான் தெரிவித்துள் ளார்.

நன்றி: மணிச்சுடர் 

Saturday, March 16, 2013

அமீரக காயிதெமில்லத் பேரவை தேரா பகுதி செயலாளராக நெல்லை ஷேக் சிந்தா தேர்வு!

அமீரக காயிதெமில்லத் பேரவை தேரா பகுதி செயலாளராக நெல்லை ஷேக் சிந்தாவை நியமித்து அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அறிவித்துள்ளார்.இவரின் சமுதாயப் பணி மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறோம்.


துபையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் நிறுவன நாள் கருத்தரங்கம்

துபை சோனாப்பூர் கிளை சார்பில் எழுச்சியுடன் நடைப்பெற்ற   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின விழா மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்க கருத்தரங்கம்!

துபை : அமீரக காயிதெமில்லத் பேரவை துபை சோனாப்பூர் கிளை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின விழா மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்க கருத்தரங்கம் சோனாப்பூர் பகுதி செயலாளர் ரஹமத்துல்லாஹ் தலைமையில் 14.03.2013 வியாழக்கிழமை மாலை சோனாப்பூர் பவர் குரூப் கேம்பில் நடைபெற்றது. 


Photobucket